பட்டிமன்றம்





வி.சுகிர்தகுமார்


  ஆலையடிவேம்பு தமிழ் இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சிறப்பு பட்டிமன்றம் இன்று பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு தமிழ் இலக்கிய பேரவையின் தலைவரும் மட்டக்களப்பு உளவியல் ஆலோசனை மையத்தின் உளவள ஆலோசகருமான க.கிருஸ்ணமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற பட்டி மன்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் கலந்து கொண்டதுடன் அருளாளராக உகந்தைமலை முருகன் ஆலய உதவிக்குரு சிவஸ்ரீ ஆ.கோபிநாத் சர்மா மற்றும் சிறப்பு விருந்தினராக அம்பாரை மாவட்ட தமிழ் எழுத்தாளர்கள் பேரவை தலைவர் தேசபந்து ஜலீல் ஜீ  கலந்து கொண்டார்.
நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்துடன்  மங்களவிளக்கேற்றலும் இறைவணக்கம் மற்றும் பேரவiயின் செயலாளர் வி.சிவன்செயலிhனல் மௌத் ஓகன் மூலம் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து ஆனந்தியின் வரவேற்பு பாடலும் இடம்பெற்றதுடன். தலைமையுரை தலைவர் க.கிருஸ்ணமூர்த்தி வழங்கினார்;. இதன் பின்னராக பிரதேச செயலாளர் வி.பபாகரனின் பிரதம அதிதி உரை இடம்பெற்றதுடன் பட்டிமன்றத்தினை ஏற்பாடு செய்த ஆலையடிவேம்பு தமிழ் இலக்கிய பேரவையினை அவர் பாராட்டினார்.
சமூகத்தை சீர்படுத்துவது அன்றைய கலாசாரமா? இன்றைய கலாசாரமா? எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற பட்டிமன்றமன்றத்தி;ன் நடுவராக இந்து இளைஞர் மன்றம் மற்றும் சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்ல தலைவருமான த.கயிலாயபிள்ளை கடமையாற்றினார்.
இப்பட்டி மன்றத்தில் அன்றைய கலாசாரமே சமூகத்தை சீர்படுத்துகின்றது எனும் தலைப்பில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானத்துறை தலைவர் கலாநிதி அனுசியா சேனாதிராஜா மற்றும் தமிழ் இலக்கிய பேரவைத்தலைவர் க.கிருஸண்மூர்த்தி ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் வி.குணாளன் ஆகியோர் தமது வாதங்களை முன்வைத்தனர்.
இன்றைய கலாசாரமே சமூகத்தை சீர்படுத்துகின்றது எனும் தலைப்பில் கவிஞர் ஓய்வுநிலை அதிபர் பாவணர் அக்கரைப்பாக்கியன் ஓய்வுநிலை விரிவுரையாளர் என்.செல்வநாதன் அதிபர் தேசமனிய ஸ்ரீ மணிவண்ணன் ஆகியோர் வாதாடினர்.
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்பட்டிமன்றத்தினை பார்வையிட அதிகளவான இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.