'டோக்கன்' முறை ஆரம்பம்




 


(க.கிஷாந்தன்)

 

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி தலைதூக்கியுள்ள நிலையில், நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் இன்று (27) முதல் 'டோக்கன்' முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

 

படையினர் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடன் மலையகம் உட்பட நாடு தழுவிய இன்று (27.06.2022) காலை முதல் இதற்கான நடவடிக்கை ஆரம்பமானது.  

 

இதன்படி அட்டன் நகரிலுள்ள மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், எரிபொருள் பெறுவதற்காக வருகை தந்திருந்தவர்களுக்கு ' டோக்கன்' வழங்கப்பட்டது. 

 

இதற்கு மேலதிகமாக அட்டன் பொலிஸாரால் குறிப்பு புத்தகமொன்றும் வழங்கப்பட்டுள்ளது. பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் என்பன அதன்மூலம் சேகரிக்கப்படுகின்றன.

 

ஒரு வாகனம் ஒரே நாளில் பல தடவைகள் எரிபொருளை பெறுவதை தடுத்தல், வரிசைகளை குறைத்தல் உள்ளிட்டவையே இந்நடவடிக்கையின் பிரதான நோக்கமென அறிவிக்கப்பட்டுள்ளது.