( காரைதீவு சகா)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி திருவிழா கடந்த மூன்று வருடங்களுக்கு பிற்பாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
முதல் நாள் இரவு நேர பூஜை நேற்று இரவு ஆலய முதன்மை கப்புகனார் மயில்வாகனம் யோகநாதன் தலைமையில் கப்புகனார் சங்கரப்பிள்ளை நித்தியானந்தன் நடாத்தினார்.
உடுக்கு சிலம்பு சகிதம் ஊர் சுற்று காவியம் பாடும் சடங்கு ஆரம்பிக்கப்பட்டது.
ஆலய தர்மகர்த்தாக்கள் நிர்வாகிகள் அம்மன் அறியார்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இப்பெருவிழா
எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை குளிர்த்தி பாடலுடன் நிறைவடைய உள்ளது.
Post a Comment
Post a Comment