கோணேஸ்வரர் ஆலயத்தைகதிர்காமம் பாதயாத்திரை குழு தரிசிக்கின்றது




 


வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பஞ்ச எச்சங்களும் ஒன்றான பாடல் பெற்ற திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்தை இன்று(24) வியாழக்கிழமை யாழ் - கதிர்காமம் பாதயாத்திரை குழு தரிசிக்கின்றது.


கடந்த 15 நாட்களாக யாழ் மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தை கடந்து திருகோணமலை மாவட்டத்தை அடைந்தள்ளது. .

நேற்று நிலாவெளி லக்ஷ்மி நாராயணன் ஆலயம் மற்றும் சல்லி அம்மன் ஆலயத்தில் தங்கியிருந்தது.

இன்று பாதயாத்திரை குழுவின் தலைவரான சி.ஜெயராசா தலைமையில் தொண்ணூறு அடியார்களை கொண்ட குழுவினர் திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்தை சென்றடைந்து அங்கு பூஜையில் கலந்து கொள்வார்கள்.

 இன்று மாலை வில்லூன்றி கந்த சுவாமி ஆலயத்திலே தரித்து நிற்கின்றது.