வீரமுனை விஷ்ணு அணியினர் வெற்றி வாகை




 


தமிழீழ விடுதலை கழகத்தின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான காரைதீவைச் சேர்ந்த அமரர் மகாதேவன் சிவனேசன் அவர்களின் ஒரு வருட ஞாபகார்த்தமாக நடாத்தப்பெற்ற அணிக்கு ஆறு பேர் கொண்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டியில் வீரமுனை விஷ்ணு அணியினர் காரைதீவு ஜொலி கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடி வெற்றி வாகை சூடியது. அதற்கான வெற்றிக்கிண்ணத்தை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் வழங்குவதை படத்தில் காணலாம்.