கல்முனை சுகாதார பணிமனையினால் பயிர்செய்கை வேலைத்திட்டம.




 


நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்


நாட்டின்  தற்போது நிலவும் பொருளாதார  நிலையை கருத்தில் கொண்டு கல்முனை பிராந்திய சுகாதர  சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரிவில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய நிலையங்களில் பயிர் செய்கையை மேற்கொள்ளும் முகமாக மரவெள்ளி நடும்  வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் விதமாக அதிகாரிகளுக்கு மரவெள்ளி தண்டுகள் கையளிக்கும் நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதர சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் இன்று (20) இடம்பெற்றது.

அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபருக்கு கல்முனை பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பளார் ஐ.எல்.எம். றிபாஸ் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த மரவெள்ளி தண்டுகள் 500  உஹன விமான படைத்தள முகாமினால் கல்முனை பிராந்திய சுகாதர  சேவைகள் பணிமனைக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது . இது தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதர  சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் ஐ.எல்.எம். றிபாஸ்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உணவு தட்டுப்பாடுகளுக்கு தீர்வு வழங்கும் முகமாக பல்வேறுபட்ட வேலைத் திட்டங்களை சுகாதரத்துறையாக இருந்தாலும் கூட கல்முனை பிராந்திய சுகாதர பணிமனை கடந்த 02 மாதங்களாக முன்னெடுத்து வருகின்றது. இதனடிப்படையில் கல்முனை பிராந்திய சுகாதர பணிமனை பிரிவில் உள்ள வைத்தியசாலைகளில் 02 வகையான பயிர் செய்கையினை மேற்கொள்ளும் முகமாக ஆர்வமூட்டி வருகிறோம். 

முதலாவதாக சகல ஆயுர்வேத வைத்தியசாலைகளிலும் ஆயுர்  வேத மூலிகைகளை வைத்தியசாலைகளின் இட வசதிக்கு ஏற்ப ஆகக் குறைந்தது 25 வகையான மூலிகையாவது அந்த இடத்தில் வளர்த்து அவற்றின்  பெயர் பட்டியலோடு நாற்றுகளையும் தயார் செய்து குறித்த ஆயுர்வேத வைத்தியசாலை பகுதியில் உள்ள பொதுமக்கள், பாடசாலை மாணவர்களுக்கு மத்தயில் மூலிகை மருந்துகளை அறிமுகம் செய்வதோடு அது தொடர்பான கையேடுகளை வழங்குவது  தொடர்பாக மாணவர்களுக்கான நிகழ்ச்சி திட்டங்களும் கடந்த 04 மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு பல ஆயுர்வேத வைத்தியசாலைகளில் ஹெர்பல் கோனர் எனும் மூலிகை தோட்டங்களை உருவாக்கி வருகின்றோம்.