.
சுகிர்தகுமார்
அத்தியாவசிய சேவைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் உள்ளிட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களினால் உருவாக்கப்படும் எரிபொருள் மாபியா தொடர்பில் மக்கள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக அலைக்கழிக்கப்படும் அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் தொடர்பில் யாரும் கவனம் செலுத்தவோ அல்லது சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ அல்லது பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பாகவோ இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.
இதேநேரம் நாட்டில் அரசாங்கம் சரியில்லை, நிருவாகம் சரியில்லை என புலம்பும் நாம் நம் பிரதேசத்தில் நடைபெறும் முறைகேடுகளை தட்டிக்கேட்கின்றோமா? என ஒரு முறை சிந்திக்க தவறுவதுடன் சுட்டிக்காட்டவும் மறந்து போகின்றோம் என்பது மக்களின் மீது நாம் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.
அப்படியான ஒரு நிலையில் தான் இன்றைய சில எரிபொருள் நிலையங்களின் செயற்பாடுகளும் அமைந்துள்ளன. சில பெற்றோல் நிலைய உரிமையாளர்களும் ஊழியர்களும் இணைந்தே இன்று பெற்றோல் மாபியாவை உருவாக்கியுள்ளனர் என்பது எத்தனைபேருக்கு தெரியும்? 420 ரூபாவிற்கு மக்களுக்கு வழங்க வேண்டிய பெற்றோலை பதுக்கும் இவர்கள் முகவர்கள் மூலம் 1500 வரையில் விற்பனை செய்து கொள்ளை இலபாம் ஈட்டிவருவதை நாம் அறியவில்லையா? இந்நிலை பெற்றோலுக்கு மாத்திரமன்றி அனைத்திலும் இடம்பெறுகின்றது. இதனை கேட்பதற்கோ பார்ப்பதற்கோ யாரும் இல்லாத நிலையில் அவர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது என்பது நமக்கு புரியவில்லையா? ஆனாலும் இவ்வாறானவர்கள் இன்று மக்களுக்கு பதில் சொல்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் இறைவனுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். இதுவே எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்களின் கருத்து.
அது அவ்வாறிருக்க அத்தியாவசிய சேவைகளுக்காக மாவட்ட செயலகத்தால் தெரிவு செய்யப்பட்ட பெரிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கூட ஜெனரேட்டர் இல்லாத நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் பல மணிநேரம் உத்தியோகத்தர்களும் அப்பாவி மக்களும் காத்திருக்க வேண்டிய நிலை. அவ்வாறான எரிபொருள் நிலையத்தை அத்தியாவசிய சேவைக்காக சிபாரிசு செய்தவர்கள் யார்?
அது அவ்வாறிருக்க டோக்கன் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தும்போது கூட அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது. இதற்குள் சண்டித்தனமும் பணமும் உள்ளவர்கள் உள்ளடக்கப்பட்டு விடுவர். இதற்கிடையே அரசியல் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களின் சொகுசு வானங்கள் எவ்வித தடையுமின்றி பெற்றோல் நிலையத்தினுள் நுழையும். அவர்களது வாகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வாகத்திற்கு தேவையான அளவு

Post a Comment
Post a Comment