(க.கிஷாந்தன்)
மலையக கல்வி சாதனைக்கு பெருமை சேர்க்கும் அட்டன் கல்வி வலயத்தில் அமைந்துள்ள அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் 130வது ஸ்தாபகர் தினமும், வருடாந்த பரிசளிப்பு விழாவும் அட்டன் டி.கே.டபிள்யூ கலாச்சார மண்டபத்தில் 29.06.2022 அன்று இடம்பெற்றது.
2020ம் ஆண்டு கொரோனா தாக்கத்தின் காரணமாக நடத்த முடியாமல் போன 2019ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழாவும், 2020ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழாவும் இதன்போது நடைபெற்றது.
பாடசாலை அதிபர் ஆர்.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு கொழும்பு பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் இராஜலெட்சுமி சேனாதிராஜா பிரதம அதிதியாகவும், பாடசாலை பழைய மாணவரும், விசேட பல் மருத்துவருமான ஏ.சுந்தர் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்நிகழ்விற்கு அட்டன் கல்வி வலய கல்வி பணிப்பாளர் ஏ.ஆர். சத்தியேந்திரா காப்பாளராக கலந்து கொண்டதோடு, வலய கல்வி பணிமனையின் அதிகாரிகள், பிரதேச பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அதிகளவானோர் கலந்து கொண்டனர்.
இதன்போது 2019ம் ஆண்டு மற்றும் 2020ம் ஆண்டுகளில் கல்வி மற்றும் ஏனைய துறைகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்ட்டன.
இந்நிகழ்வில் மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.
Post a Comment
Post a Comment