(க.கிஷாந்தன்)
10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டரை கிலோ மலைக் குருவி கூடுகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் சந்கேத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதுலப்பிட்டிய பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பதுளை குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். 44 மற்றும் 47 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்ல – தெமோதர பகுதியில் உள்ள புகையிரத சுரங்கப்பகுதியில் இருந்து இவ்வாறு மலைக் குருவி கூடுகள் கொண்டு வரப்பட்டதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் உள்ள வியாபாரி ஒருவருக்கு இந்த மலைக் குருவி கூடுகள் விற்பனை செய்யப்பட இருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
மலைக் குருவி கூடுகளில் இருந்து வெளியாகும் மெலியம் கழிவுகளைக் கொண்டு உடல் உறவில் உற்சாகத்தை பெறமுடியும் என கருதப்படுகின்றது.
இதனால் மலைக் குருவி கூடு ஒன்று சுமார் 4 இலட்சம் ரூபாவுக்கும் பிரபல ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை குற்றத் தடுப்பு பிரிவினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment
Post a Comment