அருகாமையிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லலாம்




 


அருகாமையிலுள்ள பாடசாலைகளுக்கு சேவைகளில் ஈடுபடுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

போக்குவரத்து பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ளும் வகையில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை செலுப்படியாகும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மாகாண கல்வி அமைச்சின் பணிப்பாளர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு இதற்கான அதிகாரத்தை வழங்கும் வகையில், கல்வி அமைச்சின் செயலாளரினால் சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களை தமது வீடுகளுக்கு அருகாமையிலுள்ள பாடசாலைகளுக்கு சேவைக்கு அமர்த்தும் போது, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுமாறும் கல்வி அமைச்சு, அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.