நூருள் ஹுதா உமர்.
நாட்டின் தற்போதய சூழ் நிலையில் மருதமுனை மாணவர்களின் கல்வி எதிர்காலம் குறித்த கலந்துரையாடல் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை செய்துவரும் மருதமுனை கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின் (SESEF) ஏற்பாட்டில் அமைப்பின் செயற்பாட்டு பணிப்பாளர் எம்.ஐ.எம். வலித்தின் நெறிப்படுத்தலில் மருதமுனை பொதுநூலக கூட்ட மண்டபத்தில் அமைப்பின் தலைவரும், ஊவாவெல்லச பல்கலைக்கழக பதிவாளருமான எம்.எப். ஹிபத்துள் கரீமின் தலைமையில் திங்கட்கிழமை நடைபெற்றது.
நாட்டின் தற்போதய சூழ் நிலையில் மருதமுனை மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றத்துடன்
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளினால் மருதமுனையின் கல்வி அடைவானது உரிய மட்டத்தில் பேணப்பட்ட போதும் தற்போதய நெருக்கடியான சூழலில் இதற்கான பொறிமுறையினை எவ்வாறு வகுக்கலாம் என்பது தொடர்பில் மிக நுணுக்கமாக ஆராயப்பட்டது.
கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள் பலரினதும் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையம் பெற்றுக்கொண்டதுடன் இதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி, மஹஓயா உதவிப் பிரதேச செயலாளர் திருமதி அய்மா நிஹ்மத்துள்ளா, கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட உதவிப்பதிவாளர் எம்.எப்.எம்.மர்சூக், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், அமைப்பின் கல்வி விவகார பணிப்பாளருமான ஏ.எம். றியாஸ், கல்முனை பிராந்திய பிரதிச்சுகாதரப் பணிப்பாளர் டாக்டர் எம்.பி.ஏ. வாஜித், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், அமைப்பின் சமூக வழுவூட்டலுக்கான பணிப்பாளருமான ஏ.ஏ. நுபைல், சட்டத்தரணி எம்.எம். முஅஸ்ஸம், பாடசாலை அதிபர்கள், வைத்தியர்கள், உயர் மட்ட அரச திணைக்கள அதிகாரிகள், பள்ளிவாசல் களின் நிர்வாகிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment