பூப்பந்து சுற்றுப் போட்டி






( காரைதீவு  சகா)

உலக தமிழர் பூப்பந்து சம்மேளனத்தின் (  WTBF) அமைப்பின் ஏற்பாட்டில் ஹோலண்ட்( Holland )நாட்டின் அனுசரணை மற்றும் இலங்கை பூப்பந்தாட்டக் கிளையுடனும் இணைந்து,  அம்பாரை மாவட்ட பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை நடாத்தி வருகின்றது.

விளையாட்டு உத்தியோகத்தர் பத்மநாதன் வசந்தின் கண்காணிப்பில் இச் சுற்றுப் போட்டி நடைபெற்று வருகிறது.

 மூன்றாம் நாள் நிகழ்வுகளான 18,20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஒற்றையர்

மற்றும் இரட்டையர் போட்டிகள் நேற்று முன்தினம் நிந்தவூர் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது