வைகாசிச்சடங்கில்




 


வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு சிறப்பாக நடைபெற்றுவருகிறது.


கடந்த வெள்ளி சனி, ஞாயிறு தினங்களில் உள்ளுர் ,வெளியூர் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.ஆலய கப்புவனார்களான  மயில்வாகனம் யோகநாதன், சங்கரப்பிள்ளை நித்தியானந்தன் ஆகியோர் சடங்கை முறையான நடாத்தினர்.

ஆலய தர்மகர்த்தாக்களான சாமிநாதன் கங்காதரன், இராசையா குணசிங்கம் ,பரமலிங்கம் இராசமோகன் ஆகியோரின் வழிநடாத்தலில் வருடாந்த வைகாசிசடங்கு கடந்த திங்கட்கிழமையிலிருந்து சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

இன்று(13)திங்கட்கிழமை மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வு இடம்பெறும்.நாளை(14) செவ்வாய்க்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடலுடன் சடங்கு நிறைவடையும்.

கடந்த 3வருடங்களாக கொரோனா சஹ்ரான் காரணமாக  மட்டப்படுத்தப்பட்டிருந்த இச் சடங்கு இவ்வருடம் பெருந்திரளான பக்தர்கூட்டத்துடன் கோலாகலமாக நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.