( காரைதீவு சகா)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் ஆடி வேல் விழா உற்சவத்திற்கான கன்னிக்கால் ( பந்தல்கால்) நடும் வைபவம் நேற்று முன்தினம் புதன்கிழமை(15) அதிகாலை கோலாகலமாக நடைபெற்றது .
கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்திற்கான கொடியேற்றம் எதிர்வரும் ஜூலை மாதம் 29 ஆம் தேதி நடைபெற்று ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவடைய இருக்கின்றது.
இந்த ஆடிவேல் உற்சவத்திற்கான கன்னிக்கால் நடும் வைபவம் 45 தினங்களுக்கு முன்பு இடம்பெறுவது பாரம்பரியம் .
அந்த வகையில் நேற்று முன்தினம் 15ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் இந்த பந்தக்கால் நடும் வைபவம் இடம்பெற்றது.
முதல் நாள்(14) செவ்வாய்க்கிழமை இரண்டு கால்கள் மரத்திலிருந்து வெட்டப்பட்டு மாணிக்க கங்கையில் சுத்தம் செய்து வள்ளியம்மன் ஆலயத்தில் வைக்கப்பட்டது.
மறுநாள் புதன்கிழமை அதிகாலை அங்கிருந்து அதனை பிரதான கந்தன் ஆலயத்திற்கு கொண்டு வந்து 5 மணியளவில் அதற்கு மஞ்சள் குங்குமம் சாத்தப்பட்டு 5 .15 மணியளவிலே அங்கு கன்னிக்கால் நடப்பட்டது.
கன்னிக்கால் நட்டு நாற்பத்தி ஐந்தாவது நாள் கொடியேற்றம் இடம்பெறுவது வழமை.
கதிர்காம பஸ்நாயக்க பஸ்நாயக்க நிலமே நிஷாந்த் குலசேகரவின் பிரதிநிதியாக அவரது செயலாளர் இந்த வைபவத்தில் கலந்து கொண்டார்.
இம் முறை சிறப்பாக இந்த விழாவை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது .
சமய சாஸ்திர முறைப்படி இம்முறை 15 நாட்கள் திருவிழா என்பதற்கு பதிலாக 14 நாட்கள் திருவிழா சரி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
Post a Comment
Post a Comment