மாணவர்களுக்கான பாராட்டு விழா




 


கிழக்கில் பிரசித்தி பெற்ற கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் கடந்த2020 ஆம் ஆண்டு இடம் பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்து சித்திபெற்ற 275 மாணவர்களுக்கான பாராட்டு விழா நேற்று முன்தினம் அதிபர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகோ அடிகளார் தலைமையில் நடைபெற்றது.


 பிரதம அதிதியாக கிழக்குமாகாண பொது சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி மூத்ததம்பி கோபாலரத்தினம் கலந்து சிறப்பித்தார்.

 கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் 2020ஆம் ஆண்டில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய 280 மாணவர்களில் 275 மாணவர்கள் சித்தி பெற்றிருந்தார்கள்.
 எண்பத்தி ஏழு(87) மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சாதனை படைத்து இருந்தார்கள்.
 அவர்களைப் பாராட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் கல்லூரியில் நடைபெற்றது .

கிழக்கு மாகாணத்தில் தனியொரு பாடசாலை 87 புலமையாளர்களை தோற்றுவித்திருந்தது கல்முனை பற்றிமா கல்லூரி மாத்திரம் என்பதனை இவ்வண் குறிப்பிடலாம்.

 விழாவில் பொது சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி மூத்ததம்பி கோபாலரத்தினம் அவர்கள் பதவி உயர்வு பெற்றமையை முன்னிட்டு மேடையில் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டப்பட்ட அம்சமும் இடம்பெற்றிருந்தது.

 மேலும் சித்தி பெற்ற 275 மாணவர்களுக்கும் நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டு இடம்பெற்றது.