ஈரானின் தெற்கு கிஷ் தீவில் நேற்று(15) அடுத்தடுத்து ஏழு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறுகையில்,
ஹார்முஸ் ஜலசந்தி தீவுக்கு அருகே 6 ரிக்டர் அளவுக்கோலில் நான்கு நிலநடுக்கங்களும், 5.3 ரிச்டர் அளவில் ஒரு நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது.
ஈரானிய அரசு தொலைக்காட்சி அதிகாரிகள் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள ஜெனா நகருக்கு மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளனர். இருப்பினும் சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஜெனா தலைநகர் தெஹ்ரானில் இருந்து 1,080 கிலோமீற்றர் தெற்கே உள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில், துபாய் மற்றும் அபுதாபியில் எந்த சேதமும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.
கத்தாரின் நில அதிர்வு தகவல் மையம், அங்கு வசிப்பவர்கள் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக கூறியது.
ஈரானில் சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடந்த 2003இல் ரிச்டர் அளவில் 6.6 ஆக ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 26,000 பேர் கொல்லப்பட்டனர்.
2017ஆம் ஆண்டு மேற்கு ஈரானில் ஏற்பட்ட 7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 600இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு 9,000இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Post a Comment
Post a Comment