பதவி உயர்த்தப்பட்டுள்ளார்





 (சர்ஜுன் லாபீர்)


கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கணக்காளரும் பிரபல தேசிய வளவாளருமான வை.ஹபிப்புல்லா இலங்கை கணக்காளர் சேவை தரம் -01ற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

பொதுச் சேவை ஆணைக்குழுவின் PSC/PRO/06/1028/2022 ம் இலக்க கடிதத்திற்கு அமைய 2022/06/08ம் திகதியில் இருந்து கணக்காளர் சேவை தரம்-01ற்கு பதவு உயர்த்தப்பட்டுள்ளார்.

மருதமுனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் அம்பா

றை மாவட்ட செயலகம்,நாவிதன்வெளி,கல்முனை பிரதேச செயலகங்களில் கணக்களராக கடமையாற்றியுள்ளார் என்பதோடு இலங்கை கணக்காளர் சேவையில் அகில இலங்கையில் முதலாம் நிலையில் சித்தியடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


எல்லோருடனும் அன்பாகவும் பண்வாகவும் பணிவாகவும் பழக்கூடிய இவர் ஆளுமைமிக்க ஒரு சிறந்த நிர்வாகி என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.