'சாகசப் பயணத்தின் ஆரம்ப பயிற்சி' பட்டறையும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் நிகழ்வும்"




 


பாறுக் ஷிஹான்


ஜீனியஸ் 7 விருதுப் பிரிவின் ஏற்பாட்டில் எடின்பரோ கோமகன் சர்வதேச விருதின் 'சாகசப் பயணத்தின் ஆரம்ப பயிற்சி' பட்டறையும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் நிகழ்வு  இன்று சாய்ந்தமருது  கமு/அல்ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் ஜீனியஸ் 7 விருதுப் பிரிவின் தலைவரும் முன்னால் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான  இஷட்.எம் சாஜீத்  தலைமையில் நடைபெற்றது.

இச் செயலமர்வின் போது ஜீனியஸ் 7 விருதுப் பிரிவில் வெண்கலம், வெள்ளி ,தங்க, விருதுக்கு விண்ணப்பித்து விருது செயற்பாடுகளில் ஈடுபடவுள்ள  இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டதுடன் இதன் போது  வெளிக்கள சாகசப் பயணத்தின் போது சர்வதேச நியமங்களுக்கு அடிப்படையில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் ஆரம்ப பயிற்சியாக வழங்கப்பட்டன. 


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை பொதுச்சேவைகள் ஆணைக்குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம் சலீம், 
விசேட அதிதியாக   சாய்ந்தமருது பிரதேச செயலாளர்  எம்.எம் ஆசீக் ,கெளரவ அதிதிகளாக முன்னாள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்   எம். ஐ.எம் சதாத் ,தேசிய இளைஞர் சேவைகள் மன்ற  முன்னாள்  உதவிப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ லத்தீப் , சாய்ந்தமருது பிரதேச செயலக  நிதி உதவியாளார்  எம். முஹம்மட் ,சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி   நிலையப் பொறுப்பதிகாரி  எ.ஏ.எம் ஹாரூன்,  சாய்ந்தமருது பிரதேச செயலக  இளைஞர் சேவை அதிகாரி  எம்.எம்.இஷட் இலாஹி, இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் வசந்தம்  தொலைக்காட்சி சிரேஷ்ட அறிவிப்பாளார் ரோசன் அஷ்ரப் ,ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இச்செயலமர்வில்  கலந்து கொண்டஅனைத்து   இளைஞர்களுக்கான சான்றிதழ்களும்  வழங்கி வைக்கப்பட்டன.

எடின்பரோ கோமகன் சர்வதேச   விருதுக்கு 14-24 வயது உட்பட்ட இளைஞர் யுவதிகளின் ஆளுமை,நுண்ணறிவு, வெளிக்கள ஆய்வு, தலைமைத்துவம், ஆற்றல், கல்வி,திறமை,விளையாட்டு,சர்வதேச தொடர்புகளுடைய இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்படுகின்ற ஓர் சர்வதேச விருதாகும். 

இவ் விருது நிகழ்வானது  1956 இல் பிரித்தானிய முடிக்குரிய அரசினால் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 140 ற்கும் மேற்பட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 'எடின்பரோ சர்வதேச கோமகன் விருது' க்குரிய தலைமைக் காரியாலயம் லண்டன் மாநகரிலும் இலங்கைக்குரிய பிராந்திய காரியாலயம் அவுஸ்ரேலியாவிலும்  அமைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.