மாவட்ட எல்லே சாம்பியனாக நாவிதன்வெளி பிரிவு





 ( காரைதீவு  நிருபர் சகா) 


அம்பாறை மாவட்ட விளையாட்டுப் போட்டியில் , எல்லே சம்பியனாக நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவு தெரிவு செய்யப் பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட விளையாட்டு போட்டி அம்பாறை நகர சபை மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

 விளையாட்டு போட்டியில்  எல்லே போட்டியின் இறுதிப்போட்டியில், கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவும், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவும் மோதியது.

 இப்போட்டியில் ,நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவு அணி 3 கோல்கள் ,கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவு 2 கோல்களையும் பெற்றது .

இதனால் ,இவ்வருடம் அம்பாறை மாவட்ட எல்லே சாம்பியனாக நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவு வெற்றி வாகை சூடியது.

றன்னஸ் அப் இடத்தினை கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவு பெற்று கொண்டது.

 நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ் .ரங்கநாதன் அணியினரை வாழ்த்தியதோடு,  விளையாட்டு உத்தியோகத்தர் பத்மநாதன் வசந்தையும் வாழ்த்தினார்.