கெம்பியன் கீழ் பிரிவு, அபாயம்




 


(க.கிஷாந்தன்)

பொகவந்தலாவை -  கெம்பியன் கீழ் பிரிவு தோட்டத்தில் 03ஆம் இலக்க லயன் குடியிருப்புக்கு  அருகாமையில் மண்சரிவு அபாயம் காரணமாக, நான்கு குடும்பங்களை சேர்ந்த 22 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என, பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

11  வீடுகளைக் கொண்ட லயக் குடியிருப்பு ஒன்றே மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட மக்கள்  தோட்ட உத்தியோகத்தர்களின் விடுதிகளில் தற்காலிகமாக  தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுள் 11 சிறுவர்கள், 06ஆண்கள், 05 பெண்களும் உள்ளடங்குவதாகவும், அனர்த்தம் தொடர்பில் கிராம உத்தியோகத்தர் ஊடாக அம்பகமுவ பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கிராம உத்தியோகத்தர் தெரிவித்தார்.

இதேவேளை  குறித்த தோட்டத்தில் இதற்கு முன்பும் மண்சரிவு அபாயம் ஏற்பட்ட போது, மலையக அரசியல்வாதிகள் பார்வையிட்டு மாத்திரமே சென்றதாகவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென பாதிக்கப்பட்ட மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் .