பாஸ்ப்போட் சேவர் டவுண் செய்யப்படுவதால், பாதிப்பு




 (வி.சுகிர்தகுமார்)


 

பாஸ்ப்போட் சேவர் டவுண் செய்யப்படுவதால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அம்பாரை மாவட்ட நிபுணத்துவ புகைப்பட ஸ்ரூடியோ உரிமையாளர்கள் தீர்வின்றேல் போராட்டம் ஆரம்பிக்கும் எனவும் எச்சரிக்கை வெளியிட்டனர்.
அகில இலங்கை நிபுணத்துவ புகைப்பட ஸ்ரூடியோ உரிமையாளர்களின் அம்பாரை மாவட்ட சங்கம் தனியார் விடுதி ஒன்றில் நேற்றிரவு (05)ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு கருத்து வெளியிட்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணம் மற்றும் அம்பாரை மாவட்ட நிபுணத்துவ புகைப்பட ஸ்ரூடியோ உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் ஆர்.பிரகாஸ்  இவ்வாறு கூறினார்.
அரச அங்கீகாரத்துடன் பாஸ்போட் புகைப்படம் எடுக்கும் உரிமையாளர்கள் இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காரணம் பாஸ்போட் வழங்கும் பொருட்டு புகைப்படும் எடுத்து ஒன்லைன் மூலமாக பாஸ்போட் திணைக்களத்திற்கு அனுப்பும் சேவர் கடந்த சில மாதங்களாக டவுண் செய்யப்படுகின்றது. புகைப்படம் எடுக்கப்பட்டு 7 நிமிடங்களுக்குள் அப்படத்தை அப்லோட் செய்யவேண்டும். இல்லையேல் மீண்டும் புகைப்படம் எடுக்கவேண்டும். இந்நிலையில் சேவர் நினைத்ததுபோல் டவுண் செய்யப்படுகின்றது. இதனால் புகைப்படம் மீண்டும் எடுக்கவேண்டிய நிலை உருவாவதுடன் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துள்ளதுனர்.  இதனால் நாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த நிலை நீடித்தால் நாங்களும் இந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலை உருவாகும்.  இது தொடர்பில் மூன்று தடவைகள்  அகில இலங்கை நிபுணத்துவ புகைப்பட ஸ்ரூடியோ உரிமையாளர்கள் சங்கத்தினூடாக சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு கடிதங்கள் அனுப்பியபோதும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக இன்று ஊடவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தோம். ஆகவே இவ்விடயம் தொடர்பில் கௌரவ பிரதமர் அவர்கள் தலையீடு செய்து தீர்வினை பெற்றுத்தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பின்னரும் தீர்வு வழங்காவிடின் எதிர்வரும் 15ஆம் திகதி தேசிய ரீதியில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்படும் என கூறினார்.
இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு  மாவட்ட நிபுணத்துவ புகைப்பட ஸ்ரூடியோ உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் வி.ஆர்.மகேந்திரன்   தேசிய அடையாள அட்டைக்காக வழங்கப்பட்ட மென்பொருள் இதுவரையில் சரியாக இயங்குகின்றது. ஆனால் தற்போது பாஸ்போட் மென்பொருள் இயங்கும் சேவர் டவுண் செய்யப்படுகின்றது. இதனால் நாம் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது வெளிநாடு செல்லும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. ஆனாலும் எங்களால் அவர்களுக்கான சேவையை வழங்க முடியாமல் உள்ளது. வெளிநாடு செல்வதால் இரு நன்மைகள் கிடைக்கின்றது. நாட்டிற்கு அந்நிய செலாவணி வருவதுடன் குறித்த குடும்பமும் வாழ்கின்றது. இவ்வாறான நிலையில் சேவர் டவுண் செய்யப்படுவது நியாயமற்றது. இதற்கு தீர்வை பிரதமர் மிகவிரைவில் வழங்க வேண்டும். இல்லையேல் எங்களது போராட்டமும் ஆரம்பிக்கப்படும்,என்றார்.
இச்சந்திப்பில் மாவட்டத்தை சேர்ந்த அனுமதி பெற்ற 37 ஸ்ரூடியோ உரிமையாளர்களும் கலந்து கொண்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.