யோகா செய்தவன் உலகை வெல்வான்





 ( வி.ரி.சகாதேவராஜா)



 இந்துமதம் உலகத்திற்கு அளித்த பெரும் பொக்கிஷம் யோகா. மனதை கட்டுப்படுத்தவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் யோகா மிக மிக அவசியமாகின்றது. யோகா செய்தவன் உலகை வெல்வான்.

 இவ்வாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ. எம்.டக்ளஸ் தெரிவித்தார்.

 கல்முனையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்..

 சிறு பிள்ளைகள் தொடக்கம் முதியவர்கள் வரை 1500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட ஆன்மிக நிகழ்வில் காலை பொழுதில் பேசுவதில் பெருமையடைகிறேன்.

 அம்பாறை மாவட்டத்தில் இந்து சமயம் சார்ந்த நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடந்து வருவதில் சந்தோஷம் அடைகிறேன்.

 இராம கிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு மாநில தலைவர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ் ஆசியுரை ஆற்றுகை யில்... 

 எமது உடல் ஆரோக்கியமாகவும், எமது என்பு வலிமையாகவும் இருக்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் அன்றே சொன்னார். மனதை கட்டுப்படுத்துவதற்கு யோகாசனம் மிகவும் பயனுள்ளது.  யோகாவைப் பயின்றவர்கள் மனதைக் கட்டுப்படுத்தி உலகையே வெல்வார் என்றால் மிகையல்ல.
 அறநெறி மாணவர்கள் சிறுவயதிலிருந்தே யோகாவை பயின்று கொண்டால் வாழ்க்கையில் சிறக்கும். ஆரோக்கியமாக நிம்மதியாக வாழ்வதற்கு இது உதவும் . என்றார்.


இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம்  நடாத்திய சர்வதேச யோகாசன தினம்  (ஜூன்  21  )
 கல்முனை உவெஸ்லி உயர்தர  தேசிய பாடசாலை மைதானத்தில்  கடந்த செவ்வாய்க்கிழமை காலை 06.30 மணிக்கு   கல்முனை வடக்கு பிரதேச செயலாளர்
.ரி.ஜெ. அதிசயராஜ்       தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்விற்கு      திரு முன்னிலை அதிதியாக  இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் 
 ஸ்ரீமத் சுவாமி தட்ஷஜானந்தஜீ மகராஜ்   ,           பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர்  ஜெ.எம்.ஏ.டக்லஸ்  ,   கௌரவ அதிதியாக  அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்
 வே .ஜெகதீசன் , சிறப்பு அதிதிகளாக   
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் 
 சோ. ரங்கநாதன்,காரைதீவு  பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்  வி.பபாகரன், 
நாவிதன்வெளி  உதவி பிரதேச செயலாளர்  . பே.பிரணபரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


விசேட அதிதிகளாக கல்முனை வடக்கு கோட்டக்கல்விப்  பணிப்பாளர்  எஸ்.லக்குணம்,   கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை அதிபர் அருட்தந்தை சந்தியாகு,   உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலை அதிபர் எஸ். கலையரசன், கல்முனை வடக்கு  தலைமைப்பீட சமுத்தி முகாமையாளர் கே.இதயராஜ், நிருவாக கிராம உத்தியோகத்தர் .எ. அமலநாதன், கல்முனை வடக்கு  கலாசார உத்தியோகத்தர் .த.பிரபாகரன் ,கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. வசந்தினி யோகேஸ்வரன்,  இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள கற்கை நிலைய வளவாளர்களான கே.சந்திரலிங்கம் கே.குமாரதாசன், பிரதீபன் , எஸ்.சிறிக்காந்தன் , மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான  கு.ஜெயராஜி,  ந.பிரதாப், கல்முனை வடக்கு பிரதேச செயலக இந்து கலாசார அபிவிருத்தி  உத்தியோகத்தர் திருமதி. க.சிறிப்பிரியா, நிந்தவூர் பிரதேச செயலக  இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்  திருமதி. பா.சுஜிவினி, நாவிதன்வெளி பிரதேசசெயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்  க.நிலோந்திரன்,
மற்றும் ஆலய பரிபாலன சபையின் பிரதிநிதிகள், இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், இந்து மகளிர் மன்ற உறுப்பினர்கள், மாதர் சங்கத்தின் உறுப்பினர்கள் , மற்றும் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள்,பாடசாலை மாணவர்கள்,கிராம அபிவிருத்தி சங்கங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், உட்பட 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன் இந்நிகழ்வுகள் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன்  அவர்களின் வழிகாட்டலில் இடம் பெற்றதுடன் ஏற்பாடுகளை இந்து கலாசார திணைக்களத்தின் சார்பில் மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர்  கு.ஜெயராஜி மேற்கொண்டார்.