கல்முனை- அக்கரைப்பற்று பஸ் கட்டணங்கள் கொள்ளையிடப்படுகின்றன.






(பின்ணினைப்பு)
குறித்த பஸ் நடத்துனர், தான் செய்த தவறை ஏற்றுக் கொள்வதாகவும், தமது  எதிர்கால நலன் கருதி , குறித்த படத்தை நீக்குமாறும் 074 -195 1343, 075- 336  3123 தொடர்பு கொண்டு மன்றாட்டமாக வேண்டியதன் அடிப்படையில் நடத்துனரது படம் நீக்கப்பட்டுள்ளது.


(முந்தைய செய்தி)
கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று செல்லும் தனியார் பஸ் இன்று கட்டணமாக ரூபா 150.00 இனை அறவீடு செய்தனர்.நுழைவுச் சீட்டும் வழங்க்பபடவில்லை

இதேவேளை, 2022.06.26 ந் திகதி வேறு ஒரு தனியார் பஸ், இன்று காலையில் குறித்த தூரத்தை பயணம் செய்ய, வேறு ஒரு பேருந்து நடத்துனரால்  ரூபா 125. மாத்திரம் அறவீடு செய்யப்பட்டிருந்தது. ஏன் இந்த விலையேற்றம் என்று வினவ, உரிமையாளர் அறவீடு செய்யச் சொன்னதாகவும், நடத்துநர் தெரிவித்தார் .

சம்பவ இடத்தில் வைத்து உரிமையாளர் பைரூசிரிடம் பேசியில் உரையாடிய வேளையில், கட்டணத் தொகை ரூபா 132.00 என்பதாகவும், மேலதிகமாக நடத்துனர் பெற்ற தொகையினை மீள வழங்குமாறும்  எனது தொலைபேசியிலேயே பேசி நடத்துனரிடம் மேலதிகத் தொகையினை மீள வழங்குமாறும் பணித்திருந்தார்


பயணிகளுக்கு மேலதிக தொகையானது மீள வழங்கப்பட்டது. ்பஸ“ உரிமையாளரே இவ்வாறு மேலதிக அறவீடு செய்யப் பணித்தாகவும், தற்போது நல்ல பிள்ளையைப் போல நடிப்பதாகவும்” அப் பயணத்தில் இருந்த சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டோரிடம்  நடத்துனர் தெரிவித்தார்.



இன்றைய தினத்தில் மட்டுமல்ல இது போன்ற செயற்பாடுகள் தனியார் பஸ்களில் எந்த வித முன்னறிவித்தல்களுமில்லாமல் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் பெரிதும் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்களாகும். தனியார் பஸ் கட்டணங்கள் தொடர்பில் பரிசோதகர்கள் கண்காணிப்பது மிகவும் குறைவாகக் காணப்படுகின்றது.


 இது தனிப்பட்ட ஒரு பிரச்சினை அல்ல, சமூகஞ்சார் பிரச்சயைாகும்.அப்பாவிப் பொது மக்கள், அரச அலுவலர்கள், பொது மக்கள் எனப் பலரும் இச் செயற்பாடுகளினால் பாதிப்புறுகின்றார்கள்.

இத் தீய  செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும். இது போன்ற செயற்பாடுகள் இனி மேல் இடம் பெறாதிருக்க பஸ் உரிமையாளர்கள் செயற்பட  வேண்டுமென்பதே  இச் செய்தியின் நோக்காகும்.   



..