காரைதீவில் கடல்நீர் எடுத்து கல்யாணக்கால் நடும் சடங்கு!




 


வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கின் முதல்நாள் நிகழ்வான கடல்நீர் எடுத்து கல்யாணக்கால் நடும் வைபவம் நேற்று(6)மாலை சிறப்பாக நடைபெற்றது.


கடந்த 3வருடங்களாக கொரோனா சஹ்ரான் காரணமாக  மட்டப்படுத்தப்பட்டிருந்த இச் சடங்கு இவ்வருடம் பெருந்திரளான பக்தர்கூட்டத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.

ஆலய தர்மகர்த்தாக்கள் கப்புவனார்கள் நிருவாகிகள் ஏனைய ஆலய நிருவாகிகள் அம்மன் அடியார்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்துகொண்டனர்.

கடல்நீர் முகர்ந்த கும்பம் நடைபாவாடை வழிநெடுகிலும் விரிக்கப்பட்டு ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது. வழியில் ஏலவே பார்த்துவைக்கப்பட்ட பூவரசு மரக்கிளையை ஆயுதம் பாவிக்காமல் முறித்தெடுத்து பக்திமுக்தியாக ஆலயத்திற்குகொணரப்பட்டது.

அங்கு பூவரசுமரக்கிளையை சீர்செய்து அதில்  அம்பாள் நேர்த்திக்காக கூறைச்சேலை அணிவிக்கப்படுவது வழக்கம். இம்முறை கடந்த 3தடவை நேர்த்திக்கடன் செலுத்தமுடியாமலிருந்த பக்தர்கள் நூற்றுக்கணக்கில் கூறைச்சேலைகளை சாத்தினர்.
பின்பு கல்யாணக்கால் ஆலயத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு விசேட சடங்குடன்கூடிய பூஜையுடன் கல்யாணக்கால் நடப்பட்டது.