நீதிமன்ற நடவடிக்கைகளை குறைந்தபட்ச ஊழியர்களுடன் முன்னெடுத்தல்




 


வார நாட்களில் நீதிமன்ற நடவடிக்கைகளை குறைந்தபட்ச ஊழியர்களுடன் முன்னெடுக்குமாறு அனைத்து நீதிபதிகள் மற்றும் முன்னணி நீதித்துறை அதிகாரிகளுக்கு நீதிச்சேவை ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. 

அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், குறைந்தபட்ச எண்ணிக்கையிலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மட்டுமே பணிக்கு அழைக்கும் வகையில் குறிப்பிட்ட வேலைத்திட்டத்தினை தயாரிக்குமாறு நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக  நீதிச்சேவை ஆணைக்குழ  தெரிவித்துள்ளது