அம்மன் வெளிவீதி உலா




 


வி.சுகிர்தகுமார்   

  கண்ணகி வழிபாட்டிற்கு பிரசித்தி பெற்ற இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்றில் குடிகொண்டுள்ள  அருள்மிகு மருதடி ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி பூரணை திருக்குளிர்த்தி சடங்கின் அம்மன் வெளிவீதி உலா பெருந்திரளான மக்களின் அரோகரா வேண்டுதலின் மத்தியில் இன்று இடம்பெற்றது.
 கண்ணகி வரலாற்றுடன் தொடர்புடையதும் கலை கலாசார விழிமியங்களும் வந்தாரை வாழ வைக்கும் பண்பும் சைவமும் நின்று தமிழ் வளர்க்கும் இந்து மக்கள் கூடி வாழ்ந்து மகிழும் அக்கரைப்பற்றில் மருதடியான் நீக்கமற வீற்றிருக்கும் கண்ணகிதாயின்; திருக்குளிர்ச்சி; திருக்கதவு திறக்கும் வழிபாடுகளுடன் கடந்த 7ஆம் திகதி ஆரம்பமானது.
தொடர்ந்து 10ஆம் திகதி வரை நடைபெற்ற விசேட அபிசேக மூன்றுகாலப்பூஜைகளுடன் நேற்று மாலை  இடம்பெற்று கும்ப உள்வீதி; வெளி வீதி உலாவுடனும் 12ஆம் திகதி இன்று இரவு இடம்பெறும் கல்யாணக்கால் நடும் நிகழ்வுடனும் நேற்று 14ஆம் திகதி இடம்பெறும்  திருக்குளிர்த்தி மற்றும் பக்தர்களின் நேர்கடன் பொங்கலுடனும்  16 நடைபெறும்;,வைரவர், பூஜையுடனும் 21ஆம் திகதி இடம்பெறும் எட்டாம் சடங்குடனும் நிறைவுறும்.
நேற்று மாலை மருதடி மாணிக்கப்பிள்ளையாரின் தரிசனத்துடன் ஆரம்பமான அம்மன் ஆரம்பமான வெளிவீதி உலாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  வீதிகள் தோறும் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் கும்பங்கள் வைத்து அம்மனை பக்தர்கள் தரிசித்தனர். அத்தோடு சிறப்பு வழிபாடுகளாக பந்தல்கள் அமைக்கப்பட்டு சிறுவர்களின் கலாசார நடன நிகழ்வுகளுடன் அம்மன் வரவேற்று ஆராத்தி எடுக்கப்பட்டு அம்மனை மக்கள் மகிழ்வோடு வழிபட்டு ஆசியை பெற்றுக்கொண்டனர்.
கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் கடந்த சில வருடங்களாக சிறப்பாக நடைபெறமுடியாமல் தடைப்பட்டிருந்த அம்மன் ஊர்வலம் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மிக விமர்சையாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 திருக்குளிர்ச்சி வழிபாடுகளை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கஜமுகசர்மா மற்றும் ஆலய பிரதம பூசகர் மு.வரதராஜன் தலைமையிலான பூசகர்கள் நடாத்தி வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.