வி.சுகிர்தகுமார்
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 32ஆவது தியாகிகள் தினம் நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை அக்கரைப்பற்று பாவேந்தர் சனசமூக நிலைய மண்டபத்தில் நேற்று (19) மாலை நடைபெற்றது.
முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று மண்ணின் மைந்தனும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான கே.சின்னையா தலைமையில் இடம்பெற்ற தியாகிகள் தின நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான வி.ஜெயகோபன் ஏ.எம்.சலீம் முத்துலிங்கம் வரதராஜன் ஸ்ரீ மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய தலைவர் வி.புண்ணியமூர்த்தி ஆலய திருப்பணிச்சபை உறுப்பினர்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
நினைவேந்தல் நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. தொடர்ந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் பத்மநாபாவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
பின்னராக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட உயிர் நீத்த அனைத்து உறவுகள் சார்பாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான கே.சின்னையா உள்ளிட்டவர்கள் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தமிழ் மக்களின் விடிவிற்காக முன்னெடுத்த அர்ப்பணிப்பான நடவடிக்கை மற்றும் அவர்களை நினைவு கூரவேண்டியதன் அவசியம் பற்றி குறிப்பிட்டார்.
மேலும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஆரம்பகால செயற்பாடுகள் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கருத்துரைத்தார்.

Post a Comment
Post a Comment