துணிந்தெழு விருது 2022




 


கலை மற்றும் சமூக செயற்பாட்டுக்காக துணிந்தெழு விருது 2022 வழங்கி வைப்பு !


நூருல் ஹுதா உமர்

சிறந்த ஆளுமையுடையவர்களை கௌரவிக்கும் நோக்கில், ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு மற்றும் துணிந்தெழுவினால் 2022ஆம் ஆண்டிற்கான துணிந்தெழு எனும் விருது தெரிவு செய்யப்பட்ட ஆளுமையுடையவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனக்கென  தனித்துவமான இடத்தைப் பிடித்து தன் நடிப்பு திறமையால் உலகை திரும்பிப் பார்க்கச் செய்த தென்னிந்தியாவில் பிறந்து தொழில் நிமிர்த்தம் கத்தார் சென்று தனது திறமையால் உயரந்து வரும் கரீம் அவர்களுக்கு சிறந்த கலைஞராகவும் மற்றும் சமூக செயற்பாட்டாளராகவும் அர்ப்பணிப்பான சேவையை வழங்கியமைக்காக ஸ்கை தமிழ் ஊடகத்தின் பணிப்பளார் ஜே.எம்.பாஸித் மற்றும் முகாமையாளர் அஸ்வர் ரிஸ்வி ஆகியோர்  துணிந்தெழு விருதினை வழங்கி கௌரவித்தனர்.