இந்த வருடம் அக்டோபர் மாதம் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன.
முதல் போட்டி அக்டோபர் 16ஆம் தேதியும், இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதியும் நடைபெறுகின்றன.
டி20 உலகக் கோப்பையில் எத்தனை அணிகள் கலந்து கொள்கின்றன?
இந்தப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. அதில் 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
மீதமுள்ள நான்கு அணிகள் தகுதிப் போட்டியின் வழியாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளன.
நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகள் குரூப் 1 மற்றும் குரூப் 2ஆக பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் 1-ல் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் இடம் பெற்றுள்ளன.
மீதமுள்ள இலங்கை, மேற்கு இந்திய தீவுகள், நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் ஒன்றோடு ஒன்று மோதும்.
டி20 உலகக் கோப்பை போட்டிகள் எங்கு நடைபெறவுள்ளன?
டி20 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகின்றன. ஆஸ்திரேலியாவில் ஏழு இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
சூப்பர் - 12 போட்டிகள் எப்போது தொடங்குகின்றன?
தொடரின் முதல் போட்டி இலங்கை மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையே அக்டோபர் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சூப்பர் - 12 போட்டிகள் அக்டோபர் 22ஆம் தேதியிலிருந்து நடைபெறுகின்றன.
முதல் போட்டி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடைபெறுகிறது.
இந்த இரு அணிகளும் 2021 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதின என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக் கோப்பை: இந்தியாவின் சில முக்கிய போட்டிகள்
23 அக்டோபர் - இந்தியா Vs பாகிஸ்தான்
27 அக்டோபர் - இந்தியா Vs குரூப் 1 ரன்னர் அப்
30 அக்டோபர் - இந்தியா Vs தென் ஆப்ரிக்கா
நவம்பர் 2 - இந்தியா Vs வங்கதேசம்
நவம்பர் 6 - இந்தியா Vs குரூப் 2 வின்னர்
டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி மற்றும் அரையிறுதிப் போட்டிகள் எப்போது நடைபெறும்?
தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி சிட்னியில் நவம்பர் 9ஆம் தேதி நடைபெறுகிறது.
இரண்டாம் அரையிறுதிப் போட்டி நவம்பர் 10ஆம் தேதி நடைபெறுகிறது.
இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது.
Post a Comment
Post a Comment