வி.சுகிர்தகுமார்
15 நாட்களாக பெற்றோல் வழங்கப்படாமை காரணமாக கவலை அடைந்துள்ள ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
நீண்ட நாட்களாக பெற்றோல் வழங்கப்படாத நிலையில் வெயில் மழைக்கு மத்தியில் ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் விற்பனை நிலையத்தில் பெற்றோலை பெறும் பொருட்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோ வாகனங்களை வீதி ஓரங்களில் நிறுத்தி வைத்திருந்து இரவு பகல் பாராது கண்விழித்திருக்கும் பொதுமக்களே இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசங்களில் 9 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளதாகவும் இதில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களும் உள்ள நிலையில் இரு நிலையங்களையே அதிகம் தாம் பயன்படுத்துவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
ஆயினும் இந்நிலையங்களுக்கு 15 நாட்களுக்கு மேலாக பெற்றோல் வழங்கப்படவில்லை எனவும் ஏனைய நிலையங்களுக்கு அவ்வப்போது வருவதாகவும் கூறும் அவர்கள் ஒரு நிலையத்திற்கு மாத்திரம் நாளாந்தம் எரிபொருள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இருந்தபோதிலும் அந்நிலையத்தின் ஊடாக தாம் எரிபொருளை பெறமுடியாத நிலை இருப்பதாகவும் கவலை தெரிவித்தனர்.
ஆகவே இதற்கு தீர்வு வழங்காவிடின் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் துவிச்சக்கரவண்டியினை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும் காண முடிகின்றது.
கடந்த சில காத்திருக்கும் வாகன உரிமையாளர்கள் இரவு நேரங்களில் வீதி ஓரங்களில் படுத்துறங்குவதையும் ஆங்காங்கே சிறிய அளவில் உணவு சமைத்து உண்பதையும் சிலர் விளையாட்டுக்களில் ஈடுபட்டு நேரத்தை கடத்துவதையும் இங்கு உணர முடிகின்றது.
இதேநேரம் மனஅழுத்தம் காரணமாக சில நேரங்களில் வாகன உரிமையாளர்கள் மத்தியில் கைககலப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களும் உருவாகியுள்ளன.
இந்நிலையில் அரச உத்தியோகத்தர்கள் விவசாயிகள் வியாபாரிகள் ஆட்டோ சாரதிகள் என நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் அலைந்து திரிவதையும் பலர் மனமுடைந்த வண்ணம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment