வி.சுகிர்தகுமார்
தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணப்பணிப்பாளரும் 36 வருட அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற இலங்கை நிருவாக சேவையின் விசேடதர சிரேஸ்ட அதிகாரியுமான எஸ்.அருள்ராஜா அவர்கள் இளமைக்காலத்தில் தான் கல்வி கற்ற நூற்றாண்டு விழாக்காணும் மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலய தோற்றமும், வளர்ச்சியும் பற்றிய வரலாற்றினை சுருக்கமாக எம்முன் வைத்துள்ளார்.
அரச சேவையின் உயர் அதிகாரியான இவர் 1961 இல் மட்டக்களப்பு மாங்காடு கிராமத்தில் பிறந்து மாங்காடு சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை பயின்று மாங்காடு பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முதல் பட்டதாரியும் நிருவாக சேவை அதிகாரியுமான இவர் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும்
சிறுதொழில் முயற்சியாண்;மை அமைச்சு மற்றும் பொருளாதார அமைச்சு, பிரதேச அபிவிருத்தி அமைச்சு. புனர்வாழ்வு அமைச்சு, திறைசேரி இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு, போக்குவரத்து அமைச்சுக்களில் மேலதிக செயலாளராகவும் கடமையாற்றினார். மேலும் மேற்படிப்பிற்காக புலமை பரிசில் மூலம் இந்தியா ஜேர்மனி தாய்லாந்து மலேசியா இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு சென்று பொது நிருவாக துறையில் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி நூற்றாண்டு விழாக்காணும் மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலய தோற்றமும், வளர்ச்சியும் பற்றிய சுருக்கமான அவரால் முன்வைக்கப்பட்ட வரலாற்றை பார்ப்போம்.
பசுந்தமிழ் கொஞ்சி விளையாட, வயல்களில் செந்நெல் விளைந்து குலுங்க, பாடு மீன்கள் துள்ளி விளையாட, இயற்கையின் எழில்கள் பூத்துக் குலுங்கும் மட்டு மாநகரின் தென் கோடியில் 20 கிலோ மீற்றர் தொலைவில், மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் பழம் பெரும் மாணிக்கப்பிள்ளையாரின் அருகில், விஸ்ணு ஆலய மற்றும் கட்டுப்பிள்ளையாரின் ஆன்மீகச் சூழலில் கிராமிய கலாச்சார பண்பாடும் ஒருங்கே அமைந்த, மாங்காடு கிராமத்தின் மத்தியில் சரஸ்வதி மகா வித்தியாலயம் சிறப்புடன் விளங்குகின்றதென்றால் மிகையாகாது.
இப்பாடசாலையானது 1922 இல் ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்கள் பூர்த்திடையும் நிலையில் 01-05-2022ஆம் திகதி நூற்றாண்டு விழா காண்பதையிட்டு இப்பாடசாலையில் அன்று தொடக்கம் இன்று வரை கல்விபயின்ற அனைத்து மாணவர்களும் பெருமிதம் அடைகின்றார்கள்.
இப்பாடசாலையின் ஆரம்ப வரலாற்றைப் பார்க்கின்ற போது 1875ஆம் ஆண்டளவில் தற்போது பாடசாலை அமைந்துள்ள அதே இடத்தில் முதன் முதலில் ஓர் ஓலைக்குடிசையில் 2 றூட் பரப்பளவில் உள்ள அரச காணியில் நிறுவப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
ஆரம்ப கிறிஸ்தவ மிசனறியாக காணப்பட்ட இக்கல்விக் கூடத்தில் கிறிஸ்தவ வேத பாடம் மட்டுமே போதிக்கப்பட்டது. இக்கல்விக்கூடத்தில் இக்கிராம மக்கள் மாத்திரமல்ல அயல் கிராமங்களிலிருந்தும் மாணவர்கள் வந்து கற்றதை அறிய முடிகின்றது. இக்காலத்தில் கற்பித்த ஆசிரியர்களை சட்டம்பிமார் என அழைக்கப்பட்டனர். ஆரம்பத்தில் பனையோலையில் எழுத்தாணியால் எழுதும் முறையே காணப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இக்கால கட்டத்தில் இக்கிராமம் பெரும்பாலும் காடாகவே காணப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி அமைக்கப்பட்ட பின்பு ஆற்றங்கரை ஓரங்களிலும், குளத்து வாடியிலும், வீதி ஓரங்களிலும் சுமார் 15 குடும்பங்களே வாழ்ந்து வந்துள்ளனர். இப்பாடசாலை கிறிஸ்தவ மிசனறிமார்களால் நடத்தப்பட்டுள்ளதுடன் 1922ஆம் ஆண்டு வரை 5ஆம் ஆண்டு வரை காணப்பட்டுள்ளதோடு இப்பிரதேசத்திலேயே ஓர் சிறந்த ஆரம்ப பாடசாலையாகவும் விளங்கி வந்துள்ளது.
இக்கால கட்டத்தில் கத்தோலிக்க மிசன் குருமார்களின் செயற்பாடுகள் அதிகம் காணப்பட்டுள்ளதால் 01.05.1922ஆம் ஆண்டு ஆரம்ப கிறிஸ்தவ மிசனரி பாடசாலையாக காணப்பட்ட இப்பாடசாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையாக மாற்றப்பட்டது. 1930இல் கத்தோலிக்க மிசன் குருமார்களின் முயற்சியினால் ஓலைக் குடிசையாக இருந்த இப்பாடசாலைக்கு ஓர் பதிய கட்டிடம் 60x20 அடி நீள அகலமுடையதாக கட்டப்பட்டு 5ஆம் ஆண்டு வரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இக்காலத்தில் இராம கிருஸ்ணமிசன் பாடசாலைகள் பல ஆரம்பிக்கபட்ட போதும் இப்பாடசாலை மாத்திரம் தொடர்ந்தும் றோமன் கத்தோலிக்க பாடசாலையாகவே காணப்பட்டுள்ளது.
இதேவேளை இப்பாடசாலையானது BT/439 இலக்கத்துடன் 1922.05.01 முதல் கல்முனை வட்டார வித்தியாபதியின் கீழ் பதிவு செய்யப்பட்டு பரிபாலிக்கப்பட்டு வந்துள்ளது. அம்பாறை மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட 1961களில் மட்டக்களப்பு வித்தியாபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் இப்பாடசாலை கொண்டு வரப்பட்டது. ஆரம்பத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் 34 மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் காணப்பட்டுள்ளனர். ஆபிரகாம், அருளப்பு என இரு ஆசிரியர்கள் கடமையாற்றியுள்ளதாக அறிய முடிகின்றது.
இப்பாடசாலையானது 34 மாணவர்களுடன்; காணப்பட்ட போதிலும், படிப்படியாக மாணவர்களின் தொகையும், வகுப்புகளும் படிப்படியாக அதிகரிக்கலாயின. 1956ல் 105 மாணவர்களும் 04 ஆசிரியர்களும் காணப்பட அதேவேளைஈ 1964ல் 130 மாணவர்களும் 05 ஆசிரியர்களுடன் 7ஆம் வகுப்பு வரையும் காணப்பட்டுள்ளது. 1986ல் 243 மாணவர்களும் 07 ஆசிரியர்களுமாக கடமையாற்றிய அதேவேளை 1997ல் 429 மாணவர்களுடன் 20 ஆசிரியர்களும் கடமையாற்றியுள்ளனர். தற்போது மாணவர் தொகை குறைவடைந்து 295 மாணவர்களுடன் 31 ஆசிரியர்களும் கடமையாற்றி வருகின்றனர். அதேவேளை க.பொ.த உயர் தரம் வரை தற்போது நடைமுறையில் உள்ளமையும் குறிப்பிடத்த்கது.
மேலும் 1993 ஆம் ஆண்டளவில் 10 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு க.பொ.த சாதரண தரப் பரீட்சைக்கு முதன்முதலாக தோற்றிய 60% மாணவர்கள் சித்தியடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 01.05.2009 இல் க.பொ.உயர்தர வகுப்பு ஆரப்பிக்கப்பட்டவேளை, 26.07.1978 முதல் சரஸ்வதி வித்தியாலயமாக காணப்பட்ட இப்பாடசாலை மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலயமாக மாற்றம் பெற்றது. 2009 இல் க.பொ.உ.தரம் ஆரம்பிக்கப்பட்டது முதல் க.பொ.உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் எண்ணிக்கை சராசரியாக இன்று வரை 60ம%மாகவே காணப்படுகின்றது. இருப்பினும் 2013,2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் 87ம%மான மாணவர்கள் க.பொ.உ.தர பரீட்சையில் சித்தியடைந்திருந்தமை பாராட்டப்பட வேண்டியதொன்றாகும். ஆனால் 2015 முதல் 2018 ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சித்தியடைந்தோர் வீதம் சராசரி 50ம%மாகவே காணப்பட்ட போதிலும் இறுதியாக 2020இல் க.பொ.உயர் தரத்தில் தோற்றிய 10 மாணவர்களில் 05 மாணவர்கள் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கு தகுதி பெற்றுள்ளமை பாராட்டப்பட வேண்டியதே.
க.பொ.த.சாதரணதரப் பரீட்சையினை 1994 இல் இருந்து நோக்கும் போது 2016 இல் மட்டும் 66ம%மான மாணவர்கள் சித்தியடைந்திருந்த போதிலும், ஏனைய வருடங்களில் சித்தியடைந்த சராசரி வீதம் 50% க்கும் குறைவாகவே காணப்படுகின்றது. வறுமைக் கோட்டின் கீழ் பல குடும்பங்கள் இருந்த போதிலும் இறுதியாக 2020 இல் க.பொ.சாதரணதரப் பரீட்சையில் சித்தியடைந்தோரின் பெறுபேறு 40% மாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது. புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றை பார்க்கும் போது 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் வீதம் கடந்த 10 வருடங்களில் 45%மாக காணப்பட்ட போதிலும். சித்தியடைந்த மாணவர்களின் வீதம் குறைவாகவே காணப்படுகின்றது. பெற்றோர்களும் மாணவர்களும் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிள்ளது.
பாடசாலையின் கட்டிட வளர்ச்சியைப் நோக்கும் போது ஆரம்ப காலம் முதல் ஒரே ஒரு கட்டிடத்தில் இப்பாடசாலை காணப்பட்ட போதும். 2வது கட்டிடம் 1976ஆம் ஆண்டில் 60x20 அடி நீள அகலத்தில் கட்டப்பட்டுள்ளதை காணமுடிகிறது. அதேவேளை 30.09.1997 இல் வாசிகசாலையும். 07.02.2001 இல் 25x40 அடி நீள அகலத்தில் அலுவலகக் கட்டிடமும் உருவாக்கப்பட்டு சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 23.10.2013 இல் 40x20 அடி நீள அகலத்தில் விஞ்ஞான கட்டிடம் கட்டப்பட்டுள்ளதோடு 07.11.1991 இல் அதிபர் காரியாலயத்துடன் சேர்ந்த 100x20 அடி நீள அகலமுடைய புதிய பாடசாலைக் கட்டிடமும் புதிதாக வாங்கிய காணியில் கட்டப்பட்டு பாடசாலை மாணவர்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 27.05.2013 இல் சரஸ்வதி சிலை நிறுவப்பட்ட அதேவேளை, புதிய 90x25 அடி நீள அகலத்தில் மாடிக் கட்டிடமும் கிடைக்கப் பெற்றமை வரவேற்கப்படக் கூடியதொன்றாகும். இக்கட்டிடம் மாணிக்கப்பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினரின் முயற்சியினால் புதிதாக வாங்கிய வடமேற்கு பக்கத்தில் காணப்படும் பகுதியில் கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் 2019.04.10 இல் கிராம சக்தி திட்டத்தின் மூலம் நீர் சுத்திகரிக்கும் இயந்திரமும் கிடைத்ததன் மூலம் மாணவர்களின் நீர்பற்றாக்குறைக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு முதல் சிறுவர் நேயப் பாடசாலையாக உள்ளீர்க்கப்பட்டதினால் வறிய மாணவர்களது போசாக்கு மட்டம் உயர்வடைய காரணமாகவும் அமைந்துள்ளது.
இப்பாடசாலையின் அதிபர்களாக 20க்கு மேற்பட்டவர்கள் கடமையாற்றியுள்ள அதேவேளை, தற்போது அதிபராக திருமதி தவமணி தேவி குணசேகரம் என்பவர் கடமையாற்றி வருகின்றார். 1970களில் திரு.க.இராசமாணிக்கம் அதிபராக இருந்தபோது வெட்டுக் காட்டுக்குள் உப வட்டார விளையாட்டுப் போட்டி நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலையில் கல்வி கற்ற பல மாணவர்கள் உயர் பதவிகளிலும் தற்போதும் கடமையாற்றிவருவதை அவதானிக்க முடிகின்றது. இப்பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்களில் 1981ஆம் ஆண்டு முதல் இன்று வரை 100க்கும் மேற்பட்டவர்கள் பட்டதாரிகளாக வெளிவந்துள்ளமை இப்பாடசாலையின் வளர்ச்சியின் மைல் கல்லாக காணப்படுகின்றது.
இப்பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் பலர் பல வழிகளிலும் இப்பாடசாலையின் முன்னேற்றத்துக்கு உதவி வருகின்றமை பாராட்டத்தக்கது. அதேவேளை இப்பாடசாலைமாணவர்கள் கல்வியில் மாத்திரமல்ல விளையாட்டு, கலை கலாச்சார, ஆங்கில, தமிழ் தின போட்டிகளிலும் மற்றும் மாவட்ட, மாகாண, தேசிய மட்டங்களிலும் பரிசு பெற்றுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்
மேலும் விளையாட்டுத்துறையை நோக்கும் போது 1980ஆம் ஆண்டுக்கு முன் மாணவர்கள் விளையாடுவதற்கு மைதானமாக குளத்தினை பாவித்து வந்த போதிலும், பொது விளையாட்டு மைதானம் 1980ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட பின்பு பாடசாலை மாணவர்களால் இல்ல விளையாட்டுப் போட்டி வருடா வருடம் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்பாடசாலையின் வளர்ச்சியில் தொடர்ந்தும் அக்கறையுடன் செயல்பட்டு வரும் அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர்,சகல ஆலய பரிபாலன சபையினர்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் ஏனைய கல்வி சாரா ஊழியர்கள், வலய மாகாண மட்ட கல்வி அதிகாரிகள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Post a Comment
Post a Comment