பொது இடங்களுக்குள் பிரவேசிக்கும் பொது மக்களுக்கு முழுமையான கொரோனா தடுப்பூசியினை கட்டாயமாக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் முதல் அமுலாகும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 30 திகதி முதல் பொது இடங்களுக்குள் பிரவேசிக்கும் அனைத்து தரப்பினரும் முழுமையாக கொரோனா தடுப்பூசியினை பெற்றிருப்பது அவசியமென வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
இருப்பினும், குறித்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment