இ.தொ.காவின் மேதின நிகழ்வு





 (க.கிஷாந்தன்)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்ட தலைவர், தலைவிமார்கள் மற்றும் வாலிப காங்கிரஸ் இளைஞர்கள் ஆகியோர் மாத்திரம் கலந்து கொண்ட மேதினக்கூட்டம், கொட்டகலை சீ.எல்.எப். வளாகத்தில் (01.05.2022) இன்று இடம்பெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த மேதினக் கூட்டத்திற்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இ.தொ.கா பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இ.தொ.காவின் தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன், இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், கட்சியின் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினா்கள், பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த மே தின கூட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்ட தலைவர், தலைவிமார்கள் மற்றும் வாலிப காங்கிரஸ் இளைஞர்கள், யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆரம்பகால தொழிற்சங்கவாதியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர்.கே.ராஜலிங்கத்தின் உருவப்படம் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

இதன்போது, மேதினத்தில் கலந்து கொண்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு, தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு புலமைபரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, மூத்த தலைவர், தலைவிமார்களுக்கு கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.