'ஒஸ்கார் "அமைப்பின் 2022ம் ஆண்டுக்கான சித்திரை கலாசார விளையாட்டுவிழாவும் ஒன்றுகூடலும் கடந்த 5ஆண்டுகளுக்குப்பிற்பாடு சிட்னி நகரில் parramatta park ல் இவ்வாரம் கோலாகலமாக நடைபெற்றது.
அவுஸ்திரேலியாவில் வதியும் காரைதீவு மக்களது அமைப்பான "ஒஸ்கார்"(AusKar) அமைப்பின் தலைவர் வீ.விவேகானந்தமூர்த்தி தலைமையில் இவ்வாண்டு அந்நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிகழ்வுகளின் இடையில், Auskar Cricket Carnival 2022 என பெயரிடப்பட்டு Auskar power Hitters( Working committee team) vs Auskar Family Stars (Family members team)இடையிலான 8 overs மட்டுப்படுத்தப்பட்ட கண்காட்சி மென் பந்து கிரிக்கெட் போட்டியொன்றும் சுவாரஸ்யமாக இடம்பெற்றது.
இதன்போது ஒஸ்கார் அறிமுகம் செய்த புதிய T-Shirt (Baggy Green) ஐ Auskar Family Stars அணியும், நிர்வாக உறுப்பினர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ( (White) T-Shirt ஐ Auskar Power Hitters அணியும் அணிந்து போட்டியில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும். இந்த போட்டியின் சாம்பியன் மகுடத்தை Auskar power Hitters அணி சுவீகரித்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், ஒஸ்கார் குடும்ப உறவுகள் நலன்விரும்பிகள் மற்றும் நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர். அனைவருக்கும் ஒஸ்கார் நிர்வாக குழாம் இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது என" ஒஸ்கார் "செயலாளர் அ.மகேந்திரன் தெரிவித்தார்.
கலாசார நிகழ்வுகளில் வரிசையில் மிட்டாய் பை ஓட்டம், பலூன் காலில் கட்டி உடைத்தல் ,சாக்கு ஓட்டம் ,தேசிக்காய் ஓட்டம் , பணிஸ் உண்ணல் ,முட்டி உடைத்தல் ,சங்கீத கதிரை, கயிறிழுத்தல் முதலான சித்திரை புத்தாண்டை சிறப்பிக்கும் வகையிலான நிகழ்வுகளும் இனிதே நடைபெற்றது .வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

Post a Comment
Post a Comment