பெரியநீலாவணை பொலிஸ் நிலையம் நடாத்திய இப்தார்




 


பாறுக் ஷிஹான்


புதிதாக திறக்கப்பட்ட  பெரியநீலாவணை  பொலிஸ் நிலையம்  நடாத்திய   இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு சனிக்கிழமை(30) மாலை பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில்   பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஜீ.துசார திலங்க ஜெயலால்  தலைமையில் நடைபெற்றது.

இதன் போது நிகழ்வின்  பிரதம விருந்தினராக  கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக ,கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்    பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்   பொலிஸ் பரிசோதகர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள்  உட்பட    கிராம சேவை உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர் .

அத்துடன் இந்நிகழ்வில்   இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவினை  மௌலவி  எம்.ஜி.ஏ அஷ்ஷெய்க் ஹமால் இஸ்லாஹி   மேற்கொண்டார்.

இதன் போது அதிகளவான  மக்கள் கலந்து கொண்டதுடன்  நன்றி உரையுடன் இந்நிகழ்வு சிறப்பாக  நிறைவடைந்தது.

மேலும் பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரமழான் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக  அங்கிருந்த மக்களிடம் சிநேக பூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டார்.