50 மில்லியன் டொலருக்கும் குறைவான அமெரிக்க டொலரே பயன்படுத்தக்கூடிய வகையில் கையிருப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தி இந்த விடயத்தை வெளியிட்டிருந்தார்.
தாம் இந்த ஆட்சியை 2019ம் ஆண்டு ஏற்கும் போது 7 பில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பில் காணப்பட்டதாகவும், தற்போது பயன்படுத்தக்கூடிய வகையில் அந்த தொகை 50 மில்லியன் வரை குறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை இதற்கு முன்னதாகவே சென்றிருக்க வேண்டும் என கூறிய அவர், டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை இதற்கு முன்னரே நெகிழ்வு தன்மையுடன் பேணியிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், நாட்டின் வரி வருமானம் 24 வீதத்திலிருந்து 8.6 வீதம் வரை குறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
வரி வருமானத்தை எதிர்வரும் இரு ஆண்டுகளுக்குள் மேலும் அதிகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.
Post a Comment
Post a Comment