மக்ரோங் அதிபராக இருந்த 2020 ஆம் ஆண்டிலேயே, முகமது நபியின் ஆட்சேபகரமான கார்ட்டூன் தொடர்பான சம்பவம் பிரான்ஸில் நிகழ்ந்தது.
2020 அக்டோபரில் ஒரு வகுப்பில் முகமது நபியின் கார்ட்டூன்களைக் காட்டியதற்காக ஆசிரியர் சாமுவேல் பெட்டி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த எமானுவேல் மக்ரோங், உலகம் முழுவதும் இஸ்லாம் 'நெருக்கடியான மதமாக' மாறியுள்ளது என்றார்.
"இஸ்லாமியவாதிகள் நமது எதிர்காலத்தை கைப்பற்ற விரும்புவதால்" ஆசிரியர் சாமுவேல் பெட்டி கொல்லப்பட்டார். ஆனால் பிரான்ஸ் தனது கார்ட்டூன்களை கைவிடாது ,"என்று அதிபர் மக்ரோங் கூறினார்.
முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக அவர் அறிவித்தார். இது தவிர, மதத்தையும் நாட்டையும் பிரிக்கும் 1905 ஆம் ஆண்டின் சட்டத்தை தனது அரசு வலுப்படுத்தும் என்றும் கூறினார். நாட்டின் மதச்சார்பின்மை விழுமியங்களை பாதுகாக்க மக்ரோங் உறுதியளித்திருந்தார்.
2020 நவம்பரில் எமானுவேல் மக்ரோங், பிரெஞ்சு முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரான்ஸில் அடிப்படைவாத இஸ்லாத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருந்த 'ஜனநாயக மதிப்புகள்' சாசனத்தை ஏற்றுக்கொள்ளும்படி அவர்களிடம் சொன்னார்.
இந்நிலையில், அதிபர் மக்ரோங்கின் அறிக்கைக்குப் பிறகு, பிரான்ஸ் தயாரிப்புகளை புறக்கணிக்கும் பிரச்சாரம் பல முஸ்லிம் நாடுகளில், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வேகம் பெற்றிருந்தது.
பிரான்ஸில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் குற்றச்செயல்கள் இப்போது குறையுமா அல்லது தீவிர வலதுசாரி கட்சி வரலாறு காணாத அதிக வாக்குகளைப் பெற முடிந்ததால் அது மீண்டும் பலம் பெறுமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும். ஐரோப்பாவில் அதிக முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட ஒரே நாடு பிரான்ஸ் என்பது கவனிக்கத்தக்கது.
Post a Comment
Post a Comment