காலம் நிறைய திரைகளை அவிழ்க்கும் போது பலர் முழுநிர்வாணமாக சமூகத்தின் முன்னால் குற்றவாளி கூண்டில் நிற்பர். அப்போது ஹரீஸின் இடத்தின் வலிமை விளங்கும். !!
அரசியலில் சகுனி, இராஜதந்திரி, மச்சக்காரன், வியூகம் வகுப்பவன், காய் நகர்த்துவதில் வல்லவன், போன்ற பலரும் இருப்பார்கள். இவர்கள் போன்றவர்களின் நகர்வுகளே அரசியலின் அகராதியை தீர்மானிக்கிறது. அப்படியானவர்களில் ஒருவர்தான் கல்முனை தொகுதியை சேர்ந்த திகாமடுல்ல மாவட்ட எம்.பியாக இரண்டு தசாப்தங்களை கடந்து அரசியலில் பயணிக்கும் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்.
அவரது அரசியல் வாழ்க்கை 20க்கு ஆதரவளித்தமையால் பல்வேறு முரண்பட்ட கருத்துக்களை கொண்டு ஒருதிசையில் இழுத்துவிடப்பட்டுள்ளது என்பதை அவர் நன்றாக அறிவார். இருந்தாலும் காலச்சக்கரம் அந்த முடிவை சரி காண்கிறது. பல்வேறு அபிலாஷைகள், எரிந்துகொண்டிருந்த ஜனாஸாக்கள், முஸ்லிம் சமூகத்தை நோக்கி எய்ய காத்திருந்த நச்சு கருத்துக்கள் கொண்ட அம்புகள், வில்லங்கம் நிறைந்த சட்டமூலங்களும் திட்டமிடல்களும் கொண்டு அலங்கரிக்கப்பட்ட இனவாத பலூனை உடையாமல் காக்க வேண்டிய தேவை திகாமடுல்லவில் இருந்து அதிக மக்களின் வாக்குகளுடன் பாராளுமன்றுக்கு வந்த ஹரீஸுக்கு பெரிதாகவே இருந்தது. அவருக்கு மட்டுமின்றி திகாமடுல்ல மாவட்ட மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம் எம்.பிக்கள் சகலருக்கும்.
பல்வேறு விதண்டாவாத கருத்தாடல்கள், விமர்சனங்கள், எதிரிகளினதும், துரோகிகளினதும் சதிவலைகள், உச்சகட்ட அவமான சொல்லாடல்கள் சகலதையும் கடந்து காலச்சக்கரத்தை வென்ற கல்முனையின் காவலன். இன்று அமைச்சர் பதவியை வேண்டாம் என்று நிராகரித்து சில மணித்துளிகளிலையே பிரதமர் அரசியல் கட்சி தலைவர்களிடத்தில் 20 ஐ நீக்க வேண்டும் எனும் செய்தியை ஒப்புவித்திருக்கிறார். மட்டுமின்றி 20ஐ ஒழிக்க ஜனாதிபதியும் பச்சைக்கொடி அசைத்திருக்கிறார். 19 ஓ அல்லது 21 ஓ மலரும். ஹரீஸின் மீதான கரை நீங்கும். காலச்சக்கரம் ஹரீஸின் தீர்மானத்தை சரி காணும். மக்கள் தலைவனாய் வரலாற்றில் ஓங்கி நிற்பார். இறைவன் அவர் பக்கம் என்பது நிரூபிக்கப்படும் நாள் கனிந்துள்ளது.
கல்முனையில் இருந்து புகழ்பெற்ற காரியப்பர், அஹமட், அஸ்ரப் வரிசையில் ஒரு தலைவனாய் ஹரீஸ் பேசப்படுவார். கோடிகளால் வாங்கமுடியா ஹரீஸ், அமைச்சுக்களின் கதிரையை விட வாக்காளனின் மனதை திடமாக நம்புபவர். அதனால் தான் பலம் நழுவி பாலில் அமைச்சாக விழுந்தும் தட்டி விட்டார். அதன் நிழலை கிழக்கு அரசியல் விரைவில் அனுபவிக்கும். கோடிகள் பேசியபோதும் ஒரு கொடியின் கீழ் நின்ற அஷ்ரபின் அரசியல் மண் ஈன்ற பெரிய முதலாளியின் சின்ன மகன் கிழக்கு அரசியலின் கிண்ணம் வென்ற மகனாக வரலாற்றில் தன் சுயத்தை நிரூபித்தார் இன்று. இதுதான் ஹரீஸ். இதுதான் நிஜம்.
இது தொடரும். காலம் நிறைய திரைகளை அவிழ்க்கும் போது பலர் முழுநிர்வாணமாக சமூகத்தின் முன்னால் குற்றவாளி கூண்டில் நிற்பர். அப்போது ஹரீஸின் இடத்தின் வலிமை விளங்கும்.
டேட்டாக்காட்டு இருப்பதனால் நாம் சொல்வதெல்லாம் உண்மையல்ல. சர்வதேச அரசியலில் முஸ்லிம் அரசியல் தூண்டிலில் மாட்டிக்கொண்டிருக்கும் புழு. ஹரீஸ் அந்த தூண்டிலை பிடித்திருப்பவரின் கையை இயக்கும் அல்லது இயக்குபவரின் மூளையில் அமர்ந்திருக்கும் சிந்தனையாளன். கால சக்கரம் பல கதைகளை நமக்கு காதில் உரத்து கூற காத்திருக்கிறது.
நிறைய பாடங்கள் நாம் கற்போம். காலம் கற்பிக்கும். காலம் நிறைய திரைகளை அவிழ்க்கும் போது பலர் முழுநிர்வாணமாக சமூகத்தின் முன்னால் குற்றவாளி கூண்டில் நிற்பர். அப்போது ஹரீஸின் இடத்தின் வலிமை விளங்கும்.
கிழக்கு முஸ்லிம் மேம்பாட்டு பேரவை
Post a Comment
Post a Comment