தந்தை செல்வா சத்தியாகிரக அறவழிப்போராட்டத்தை ஆரம்பித்த காலிமுகத்திடலில் இன்று சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் என அனைவரும் இணைந்து ஆரம்பித்துள்ளனர்




 


வி.சுகிர்தகுமார் 

  தந்தை செல்வா சத்தியாகிரக அறவழிப்போராட்டத்தை ஆரம்பித்த காலிமுகத்திடலில் இன்று சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் என அனைவரும் இணைந்து ஆரம்பித்துள்ளனர் என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

நாட்டில் வாழும் தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைவரும் உரிமையினை பெற்றுக்கொள்ள வேண்டும் என முதல் அடி எடுத்து வைத்தவரும் தந்தை செல்வா அவர்களே என்றார்.

இந்த நாட்டில் உள்ள ஆட்சியாளர்களினாலே மக்கள் சொல்லொணா துன்பத்தை அனுபவித்'து வருகின்றனர். முறையற்ற இவர்களது ஆட்சியில் நீதி துறை முதலில் பாதிக்கப்பட்டது. பின்னர் நிருவாக துறை பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்ற விவசாயத்துறை பாதிக்கப்பட்டது. இதன் பின்னராக நாட்டில் அனைத்து துறைகளும் விடயங்களும் பாதிப்புக்குள்ளாகியது. இதன் காரணமாகவே அரசாங்கம் பதவி விலகவேண்டும் என மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

இங்கு உரையாற்றிய அம்பரை மாட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின்; பாராளுமன்ற மன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்..... ஒரு நாட்டின் தலைவன் நாட்டை நிர்வகிக்க முடியாது தத்தளித்துக்கொண்டிருக்கின்றார். இந்த அரசு எவ்வேளையிலும் கவிழ்ந்து அனைவரும் பதவியை இழக்கலாம். இதன் காரணமாக ராஜபக்ஷ அரசு நாட்டை விட்டு வெளியேறுவதில் எவ்வித சந்தேகமுமில்லை என்றார். நீண்ட காலமாக எம்மக்களை ஏமாற்றி அடித்து ஒழித்தமைக்காக இறைவனால் கொடுக்கப்பட்ட தண்டனையே இந்நிலை எனவும் குறிப்பிட்டார்.
இதேநேரம் எதிர்கட்சியினால் முன்வைக்கப்பட்டிருக்கும் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதையும் கட்சியின் தலைவர்கள் ஆராய்ந்து வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.


இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஸ்தபாகர் தந்தை செல்வாவின் 45ஆவது சிரார்த்த நினைவு தினமானது கட்சியின் பொத்துவில் தொகுதி தலைவர் ஏ.கலாநேசன் தலைமையில் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.காந்தரூபனின் ஏற்பாட்டில் விநாயகபுரம் குருகுல பிரார்த்தனை மண்டபத்தில் நேற்று  மாலை இடம் பெற்றது.

இதன் போது தந்தை செல்வாவின் உருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து நினைவுச்சுடர் ஏற்றி மலர்கள் தூவி பிரார்த்தனை செய்யப்பட்டது.

நிகழ்வில் அம்பரை மாட்ட தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற மன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் முன்னாள் பாராளுமன்ற மன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர் செல்வபிரகாஷ் ஆலையடிவேம்பு பிரதேச தலைவர் ஆர்.ஜெகநாதன் தம்பிலுவில் பிரதேச தலைவர் விபுல்; தமிழ் அரசு கட்சியின் திருக்கோவில் மற்றும் பொத்துவில பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.