வி.சுகிர்தகுமார்
கடந்த புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த 24 மாணவர்கள் மற்றும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட 67 மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று திருவள்ளுவர்; வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்றது.
பாடசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் பெற்றோர்கள் மற்றும் விழாக்குழுவின் ஒழுங்கமைப்பில் அதிபர் எம்.தங்கேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற பாராட்டு நிகழ்வில் திருக்கோவில் வலய கல்விப்பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக வலயக்கல்வி அலுவலக கணக்காளர் யு.எல்.எம்.றினோஸ் ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் ஸ்ரீ இராமகிருஸ்ண மகாவித்தியாலய அதிபர் திருமதி நித்தியானந்தன் மக்கள் வங்கி உதவி முகாமையாளர் ஜெசாந்தன் உள்ளிட்ட கல்விசார் பிரதிநிதிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்விற்கு வருகை தந்த அதிதிகளுக்கு மாணவர்கள் அமோக வரவேற்பை வழங்கினர். பின்னர் மண்டபத்தில் இடம்பெற்ற வரவேற்பு நடனம் தலைமை உரையினை தொடர்ந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்து கோட்டமட்டத்தில் முதல் நிலையினை கி.சபினாஸ்ரீ உள்ளிட்ட 24 மாணவர்களுக்கும் நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ் பரிசுப்பொதிகள் வலய கல்விப்பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரனால் வழங்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து விசேட அதிதிகளால் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 67 மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டமை சிறப்பம்சமாக அமைந்தது.
இதன் பின்னராக வலய கல்விப்பணிப்பாளரின் சேவையை பாராட்டியும் பாடசாலை அதிபரை பாராட்டியும் பெற்றோர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இதேநேரம் கல்வியை கற்பித்த ஆசிரியர்களும் பெற்றோர்களால் கௌரவிக்கப்பட்டதுடன் வலய கல்விப்பணிப்பாளரின் உரையும் இடம்பெற்றது.
அவரது உரையில்; பெற்றோர்கள் இப்பரீட்சையில் காட்டும் அக்கறையை உயர்கல்வியில் காட்டுவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார். ஆகவே பெற்றோர்கள் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதேநேரம் எதிர்வரும் காலத்தில்; குறித்த பாடசாலை தொடர்ந்தும் புலமை பரிசில் பரீட்சையில் சாதனை படைப்பதாகவும் எதிர்காலத்திலும் சாதனை படைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
நிகழ்வில் இடம்பெற்ற மாணவர்களின் கலை நிகழ்வுகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment