.சுகிர்தகுமார்
ஆலயங்களின் வழிபாட்டு முறைமைகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் பிரதேசத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுத்தல் எனும் இரு பிரதான நோக்குடன் ஆலையடிவேம்பு ;பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆலயங்கள், இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அறநெறி ஆசிரியர்களுக்கும் பிரதேச செயலாளர் மற்றும் இராணுவத்தினருக்கும் இடையிலான விசேட சந்திப்பும் கலந்துரையாடலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள 241ஆம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேட் கொமாண்டர் ஏ.சி.அயகோன் கலந்து கொண்டதுடன் ஆலய அறங்காவலர் சபையினர் சமயப்பெரியார்கள் அறநெறி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலாளரின் தலைமை உரையில் ஆலயங்களின் சமூகப்பொறுப்புக்கள் தொடர்பில் சுட்டி காட்டினார். மேலும் இன்றைய இளைஞர்களை நல்வழிப்படுத்துவதன் அவசியத்தையும் ஆலயங்களின் இடம்பெறும் வழிபாட்டு முறைமைகள் மற்றும் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்ப வேண்டிய பாடல்கள் மற்றும் நேரங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் சமூகத்தில் தற்போது நடைபெறுகின்ற கொள்ளை சூதாட்டம் இளைஞர்களின் தேவையற்ற செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் போன்ற விடயங்களும் அவரால் சுட்டிக்காட்டப்பட்டன.
இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேச ஆலயங்களின் செயற்பாடுகள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டதுடன் சமூகப் பொறுப்புக்கள் தொடர்பிலும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்து கொண்டவர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் மரண நிகழ்வுகளில் பயன்படுத்தவேண்டிய தேவார திருமுறை பாடல்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.
இதன் பின்னராக உரையாற்றிய பிரிகேட் கொமாண்டர் மக்களுடன் இணைந்து சேவையாற்ற இராணுவம் எவ்வேளையிலும் தயாராகவுள்ளதாகவும் தங்களோடும் பிரதேச செயலகத்தோடும் பொதுமக்கள் இணைந்து பயணிக்கும்போது பிரதேசத்தில் இடம்பெறும் பல்வேறு அசம்பாவிதங்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறினார். மேலும் இராணுவத்தினரின் முக்கிய தொலைபேசி இலக்கங்களை ஏற்கனவே வழங்கியுள்ளதாகவும் அவர்கள் தம்மோடு எவ்வேளையிலும்; தொடர்பு கொண்டு குறைபாடுகளை தெரிவிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இதன் பின்னர் ஆலயங்கள் மற்றும் மரணச்சடங்கில் ஒலிபரப்பு செய்ய வேண்டிய பாடல்கள் தொடர்பில் முறையான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்த அனைவரது விருப்பின் பேரில் ஓய்வு பெற்ற அதிபர் இந்துமாமன்ற தலைவர் வே.சந்திரசேகரம் அவர்களது தலைமையில் 7பேர் கொண்ட குழுவும் தெரிவு செய்யப்படட்டது.

Post a Comment
Post a Comment