( காரைதீவு நிருபர் சகா)
விவசாயிகளுக்கான நஞ்சற்ற சூழல் நேயமான நெற் செய்கையை ஊக்குவித்தல் தொடர்பான ஒருங்கிணைந்த விழிபூட்டல் நிகழ்வு நேற்று (20) புதன் காலை மண்டூரில் இடம்பெற்றது.
மண்டூர் விவசாய போதனாசிரியர் பி.பிரமேந்திரா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு விவசாய திணைக்களத்தின் தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் ரீ.மேகராசா மண்டூர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ஜெயகாந்தன் பாலையடிவட்டை இராணுவ நிலைய பொறுப்பதிகாரி உட்பட்ட அதிகாரிகள் விவசாய போதனாசிரியர்கள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கமநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சேதன நெற் செய்கையில் விளைச்சலை அதிகரிக்க விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவூட்டப்பட்டதுடன் விரைவு முறையில் கூட்டெரு உற்பத்தி செய்யும் முறை, மீனமில கரைசல் தயாரிக்கும் முறை, திரவ பசளை தயாரிப்பு, ஜீவாமிர்த கரைசல் தயாரிக்கும் முறை மற்றும் கருக்கிய உமி போன்ற செய்துகாட்டல்கள் விவசாய போதனாசிரியர்களான P.சகாப்தன், MFM abzel றிப்கி தொழில்நுட்ப உத்தியோகத்தர் கே.கிலசன் ஆகியோரால் தெளிவான விளக்கங்களுடன் செய்து காட்டப்பட்டன.
Post a Comment
Post a Comment