பயணம் பயணம், மாட்டு வண்டியில் பயணம்





யாழில் மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்ற ஆசிரியர்கள்!
ஆசிரியர்கள் மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்ற சம்பவமானது இன்று காலை தெல்லிப்பழையில் இடம்பெற்றுள்ளது.
எரிபொருட்களின் விலைகள் நாட்டில் உச்சம் தொட்டுள்ள நிலையில் விலையேற்றத்தை பிரதிபலிக்கும் முகமாக குறித்த ஆசிரியர்கள் இவ்வாறு மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்றுள்ளனர்.
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆசிரியர்களே இவ்வாறு மல்லாகம் சந்தியில் இருந்து தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வரை மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்றுள்ளனர்.