பொண்டுகள்சேனை கிராமத்திற்கு ராமகிருஷ்ண மிஷனின் பாரிய உதவி!





 ( காரைதீவு சகா)


 மட்டக்களப்பில் மிகவும் பின்தங்கிய பொண்டுகள்சேனை கிராமத்திற்கு இராமகிருஷ்ண மிஷன் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து பல உதவிகளையும் செய்துள்ளது.

 வங்கத்தின் சிங்கம் வீரத்துறவி சுவாமி சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் 125வது வருட நிறைவையொட்டி இடம் பெற்றுவரும் நிகழ்ச்சி தொடரின் ஓர் அங்கமாக இந்த உதவி வழங்கப்பட்டது .

அந்த கிராமத்துக்கு தேவையான குடிநீர் திட்டம் மற்றும் குழாய் கிணற்றுடன் கூடிய தண்ணீர் தாங்கி ,கம்பியூட்டர் ,மின் விசிறி ,நீர் வடிகட்டி தாங்கி,  மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் போன்றன வழங்கி வைக்கப்பட்டன.

இராமகிருஷ்ண மிஷனின் கொழும்பு தலைமையக தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மஹராஜ் மற்றும் மட்டக்களப்பு மாநில ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ்,கிரான் பிரதேச செயலக பிரதேச செயலாளர் ஆகியோர் அங்கு வருகை தந்து அவற்றை மக்களிடம் கையளித்தனர்.

அத்தோடு இந் நிகழ்வுக்கு வருகை தந்திருந்த சுவாமிகள் கலந்து கொண்ட மாணவர்கள் உள்ளிட்ட  அனைவருக்கும்  சுவாமிகள் நினைவு அன்பளிப்புக்களையும் , இனிப்பும் வழங்கி ஆசீர்வாதமும்  செய்தார்கள்.

 மற்றும்  இந்து மதம் சார்ந்த  சமய நூல்களும்  குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன.

 மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.


நிகழ்வில் அதிபர் நன்றி கூறுகையில்..

 இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்து ஆசியுரை வழங்கிய இலங்கை ராமகிருஷ்ண மிசன் தலைவர்  ஸ்ரீமத் சுவாமி அக்‌ஷராத்மானந்தஜீ ,  இவ் விழா தொடர்பான அறிமுகவுரை  வழங்கிய மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிசன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி  தக்‌ஷஜானந்தஜீ மஹராஜ்  ,  மற்றும் இத் திட்டத்தின் கீழ் எமது பாடசாலையின் பெயரினை  சிபாரிசு செய்ய முன்னிலைப்படுத்திய  மட்டக்களப்பு ராமகிஷ்ண மிசன் உதவிப் பொதுமுகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ மஹராஜ்  , பிரதம விருந்தினரான கலந்து சிறப்பித்த கிரான் பிரதேச செயலக பிரதேச செயலாளர் எஸ்..ராஜ்பாவு   , கல்குடா  கல்வி வலயக் கல்விப்பணிப்பாளரின் பிரதிநிதியாக கலந்து கருத்துரை வழங்கிய உதவிக்கல்விப் பணிப்பாளர் ( முன்பள்ளி)  எஸ். S.ஜீவாகரன்  
, இப் பிரதேச கிராமசேவை உத்தியோகத்தர், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர், மாதர் சங்கத் தலைவி, பழைய மாணவர்கள், பெற்றார் - பாதுகாவலர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

 தொடர்ந்து ராமகிருஷ்ண மிஷனின் நூல் தொகுதி விநியோகமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.