நினைவில் வரும் நிதியமைச்சர்கள்!!
என்னவோ எதுவோ !
எடுத்த எடுப்பில்...அமைச்சர் அலி சப்ரி அவர்கள் நிதி அமைச்சர் பதவிக்குத் தகுதியில்லாதவர் என்பவர்களுக்கு பின்வரும் பட்டியல் இலங்கையின் நிதியமைச்சர்களாகப் பணியாற்றியவர்களில் நிதி முகாமைத்துவத்தில் தகுதி பெற்றவர்கள் யாரும் உள்ளார்களா என்பதை அறிய உதவும்.
இலங்கையின் நிதியமைச்சர்கள் எவரும் நிதி முகாமைத்துவத்தில் தேர்ச்சியும் ஆர்வமும் உள்ளவர்களாயிருந்தவர்கள் என்பதைவிட அரசின் தலைமைக்கு விசுவாசமும் நம்பிக்கையுடையவர்களாயிருந்தவர்கள் என்பதே மெய்.
அரசின் கொள்கையை நிருவாகப் படுத்துவதில் இவர்களின் வகிபாகம் முக்கியமாகவிருந்தது என்பது முக்கியமானது.
இவர்களின் பட்டியலைப் பார்த்தால் அது பல கதைகளை உங்களுக்கு நினைவுபடுத்தும்.
இலங்கையின் நிதியமைச்சர்களாகவிருந்தவர்களின் கல்வி, தொழில் அனுபவம் என்பவற்றைச் சுருக்கமாக இங்கு தருகிறேன். பாருங்கள்-
¶ஜே ஆர் ஜயவர்த்தன :- வழக்கறிஞர்
1947-1953/ 1960-4/1970-7
இரு தடவை
¶சேர். ஒலிவர் குணதிலக:- 1953-54/1960-60
Auditor General 1931-1946
உதவிக் கணக்காளர் - லேக்கவுஸ்
¶எம் டி எச் ஜயவர்த்தன:- 1954-1956
பொருளியல் பட்டதாரி; பரிஸ்டர்
¶ஸ்ரான்லி சொய்சா : 1956-1959
வழக்கறிஞர்:
¶எம் எம் முஸ்தபா - 1959/11-1959/12
வழக்கறிஞர்
¶சி பி டி சில்வா - 1962/8-1962/11
உதவி அரசாங்க அதிபர்
¶பி ஜி கலுகல்ல- 1962-1963
எழுதுவினைஞர் Clerk
¶இலங்கரத்னா- 1963-1964
உயர்தரக்கல்வி- எழுத்தாளர்
¶*என் எம் பெரேரா -
1964/6- 1964/12 ; 1970-1975 இரு தடவை
விஞ்ஞானமானி ( இலண்டன்)
கலாநிதி ஆய்வு
ஜெர்மனின் அரசியலமைப்புப் பற்றியது.
*(பொதுவாக இவரைப் பலரும் சொல்வது போல் அவர் பொருளியல் பட்டதாரி அல்ல)
¶யு பி வன்னிநாயக்க 1965-1970
கல்வி : கல்கிசை சென் தோமஸ்
ஆசிரியர் ; அதிபர்.
சட்டசபை நுழைவு: 1933.
¶பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா -
1960-1962 ; 1975-1977
சட்டத்தரணி (*சிறந்த புலமையாளர் எனப் பெயர் பெற்றவர்)
பிரதமர் சிறீமாவோவின்- பாராளுமன்ற விவகாரச் செயலாளர்( பாதுகாப்பு/ வெளிவிவகாரம்)
பாராளுமன்றப் பிரவேசம்: 1960
¶•ரொனி டி மெல் - 1977-1988
இலங்கை சிவில் சேவை
அமைச்சுக்களின் செயலாளர்.
¶நயினா மரிக்கார் - 1988-1989
சட்டத்தரணி
¶டி பி விஜேதுங்க - 1989-1994
பொலிஸ் உத்தியோகத்தர்
கூட்டுறவுப் பரிசோதகர்
¶சந்திரிகா குமாரதுங்க 1994-2001
விஞ்ஞானமாணி( Institut d'Etudes Politiques de Paris)
டிப்ளோமா அரசியல் விஞ்ஞானம்.
PhD - அபிவிருத்திப் பொருளியல்
¶கே என் சொக்சி 2001-2004
ஜனாதிபதி சட்டத்தரணி. சிறந்த வழக்கறிஞர்.
இவர் ஜனாதிபதி பிரேமதாசவின் தேர்தல் வழக்கில் அவருக்காக ஏற்பட்டு வென்றவர்.
இவரது தந்தை இராணி வழக்கறிஞரும் உயர்நீதிமன்ற நீதிபதியுமாவார்
¶சரத் அமுனுகம : 2004- 2005
இலங்கை நிர்வாக சேவை
அனைத்துலக குடிசார் அலுவலர் யுனெஸ்கோ- பரிஸ்
பொது நிர்வாக உள்ளூராட்சி அமைச்சர்
¶மகிந்த ராஜபக்ச: 2005-2015
சட்டத்தரணி
1970 இல் பா.உ வாக அரசியல் நுழைவு
மீன்பிடி அமைச்சர், தொழில் அமைச்சர்,
அதே -சமகாலத்தில் துறைமுகங்கள் கப்பற்துறை, பாதுகாப்பு நகர அபிவிருத்தி, பெருந்தெருக்கள் எனப் பல அமைச்சுகளையும் வகித்தார்.
¶ரவி கருணாநாயக்க :2015-2017
கணக்காளர் , தொழில் அதிபர்.
¶மங்கள சமரவீர:- 2017-2019
கலைமாணி -( உடை வடிவமைப்பு தொழினுட்பம் - இலண்டன்)
வெளிவிவகார அமைச்சர்
ஊடக அமைச்சர்
பாராளுமன்ற அரசியல் :1989 -2020
¶பசில் ராஜபக்ச :
இசிபதான கல்லூரி
ஆனந்தா கல்லூரி
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
¶அலி சப்ரி: 2022-
ஜனாதிபதி சட்டத்தரணி
நீதி அமைச்சர்- 2020-2022
பாராளுமன்ற நுழைவு -2020
சவூதி அரேபியாவின் இலங்கைக்கான Consul General ஆகப் பணியாற்றியவர்.
இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தில் பொருளாளராக இருந்தவர்.
கோத்தாபய பாதுகாப்புச் செயலாளராகவிருந்தபோது அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகள், கோத்தாவின் அமெரிக்க பிரசா உரிமை விவகாரம் போன்ற வழக்குகளில் அவர் சார்பில் ஏற்பட்டவர்.
இவர்களில்:
அதிக ஆண்டுகள் நிதியமைச்சர்களாகப் பணியாற்றியவர்கள்
வரலாறு படைத்தவர்கள்
நீங்கள் உங்கள் அறிவுக்கெட்டிய காலந்தொடக்கம் பாவித்த காசுத் தாள்களில் கண்ட நிதியமைச்சருக்கான கையொப்பங்களாக இருந்தவர்கள்
உங்கள் நினைவுக்கு வரலாம்!!😊
Post a Comment
Post a Comment