இன்றைய தினம்(24) கொழும்பை அண்மித்துள்ள ஒரு சில வீதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித் தடைகளில் கூரிய ஆணி போன்ற கம்பிகளை பொருத்தி கறுப்பு நிற பொலித்தீனால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மக்களுக்கு பாரிய காயங்கள் ஏற்படுவதற்கான அபாயம் நிலவுகின்றமை தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர், பொலிஸார் மற்றும் படையினர் எந்தவொரு நிலைமையின் கீழும் எதிர்ப்பில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கும் சுதந்திரமாக நடமாடுவதற்கும் உள்ள மக்களின் உரிமையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏதேனும் வன்முறை சூழல் ஏற்பட்டால் அது நாட்டிற்கு பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment