எரிபொருள் பிரச்சினையால் ஆசிரியர்கள், அரச அலுவலர்கள் வரவுகுறைவு!




 


நாட்டில் சமகாலத்தில் நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக ஆசிரியர்கள் தொடக்கம் அரச அலுவலர்கள் வரை பெரும் சிரமத்தை எதிர்நோக்கிவருகின்றனர். அவர்களின் வரவு படிப்படியாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பாடசாலைசேவையை மேற்கொண்டுவந்த ஆட்டோ சேவைகள் பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக தமது சேவையை இடைநிறுத்தியுள்ளன.ஆசிரியைகள் சேர்ந்து பாடசாலைக்கு சென்றுவந்த வான் மற்றும் ஆட்டோ சேவைகளும் ஒழுங்கில்லாமல் ஸ்தம்பிதநிலையை அடைந்துகொண்டிருக்கிறது.

கொழுத்தும் வெயிலிலும் நடுநிசியிலும் அதிகாலையிலும் 2 அல்லது 3மணித்தியாலங்கள் கால்கடுக்க கியுவரிசையில் காத்துநின்று ஏமாந்த வரலாறும் உள்ளது. இதனால் அரசஅலுவலர்களும் பொதுமக்களும் பாரிய விரக்தியுடன் இருப்பதை அவதானிக்கமுடிகிறது.

திருக்கோயில், சம்மாந்துறை போன்ற சில பிரதேச செயலாளர்கள் உரிய நடவடிக்கைஎடுத்து அரசாங்க ஊழியர்களுக்கென பிரத்தியேக வசதி செய்துகொடுத்திருக்கிறார்கள்.எரிபொருள் நிரப்புநிரலையங்களில் தனியானதொரு கியுவரிசையை அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர்.

ஆனால், இந்நடைமுறை எல்லா இடங்களிலும் நடைமுறையில்லில்லை. திணைக்களத்தலைவர்கள் சிலர் சமகால நெருக்கடிநிலையை மறந்து வழமைபோல் கட்டளை இட்டு சொல்லுமிடத்திற்கு வருமாறு பணிக்கப்படுவது குறித்து அலுவலர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

 'எரிபொருளுக்கான எற்பாட்டைச் செய்யுங்கள்.நாம் வருகிறோம் ' என அவர்கள் பதிலளித்துள்ளனர்.
இந்தநிலை நீடித்தால் பாடசாலை தொடக்கம் அலுவலகம் வரை அரச அலுவலர்களின் வரவு மேலும் குறைவடையும் ஆபத்து எதிர்நோக்கப்படலாம்.