கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு.




 


புத்தாண்டு கலாசா விளையாட்டு விழாவில் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு.



24வது மாபெரும் கலாசார விளையாட்டு விழா 2022
சுபகிருது சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 39வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டுக் கழகமும் விபுலாநந்தா சனசமூக நிலையமும் காரைதீவு பிரதேச செயலகம் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் இணை அனுசரணையுடன் நடாத்திய 24வது மாபெரும் கலாசார விளையாட்டு விழாவில் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு மிக சிறப்பாக இடம்பெற்றது.

காலை நிகழ்வான மரதன் ஓட்டமானது கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு காரைதீவு விளையாட்டு கழக காரியாலயத்தில் நிறைவுபெற்றது.

மாலையில் விபுலானந்த மைதானத்தில் தலைவர் வி.அருள்குமரன் தலைமையில் கலாசார விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து சிறப்பித்தார்.


காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தவிசாளர் கி.ஜெயசிறில் ஆலோசகர்களான செ.இராமகிருஸ்ணன் வே.இராஜேந்திரன் வே.த.சகாதேவராஜா உள்ளிட்ட அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

கல்வி சாதனையாளர்கள் தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது உயர்தர பரிட்சையில் வைத்திய துறைக்கும் பொறியில் துறைக்கும் தெரிவானவர்களுக்கும் கலைத்துறையில் 3ஏ சித்தி பெற்றவர்களுக்கும் சாதாரண தரப்பரிட்சையில் 9ஏ சித்திபெற்ற மாணவர்களும் காரைதீவு விளையாட்டு கழகத்தினரால் பகிரங்கமாக மைதானத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் இவ் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வில் அதிதிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

காரைதீவு சகா