( காரைதீவு நிருபர் சகா)
சம்மாந்துறை பிரதேச சபையின் ஸ்ரீ.ல.சு.கட்சி உறுப்பினர் வை.பி.எம். முஸம்மில் உறுப்பினர் பதவியில் இருந்து கட்சியால் நீக்கப்பட்டதை அடுத்து, அவ்விடத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளரும் ,சம்மாந்துறை பிரதேசத்தின் பிரபல வர்த்தகருமான அப்துல் ஹமீட் அன்வர் (றமிஸ்) புதிய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் தயாசிறி ஜயசேகர நேற்று கட்சி தலைமையகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
அச் சமயத்தில், சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளருமான ஏ.அச்சிமொகமட், சபையின் முன்னாள் உப தவிசாளரும், கட்சியின் மாவட்ட அமைப்பாளருமான வெ.ஜெயச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment