திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம்




 


வி.சுகிர்தகுமார்


இன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள அதிபர் ஆசிரியர்களின் சுகயீன லீவு போராட்டத்தின் காரணமாக அம்பாரை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்தது.

தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் அதிபர் ஆசிரியர்களின் சுகயீன லீவு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதிபர் ஆசிரியர்களின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டது.

இதன் காரணமாக வலயத்தின் 47 பாடசாலைகளில் 27 பாடசாலைகளின் அதிபர்கள் சமூகமளித்த நிலையில் 890 ஆசிரியர்களில் 142 ஆசிரியர்கள் மாத்திரம் வருகையினை உறுதிப்படுத்தியதாக வலயக்கல்வி பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை  பாடசாலைகள் திறந்திருந்த போதிலும் மாணவர்களின் வருகை குறைந்தளவே காணப்பட்டது.

இதனால் கல்வி நடவடிக்கைகள் யாவும் ஸ்தம்பிதம் அடைந்ததுடன் மதிய நேரத்தின் பின்னராக அதிகளவான பாடசாலைகள் மூடப்பட்டது.

இதன் காரணமாக மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் யாவும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.